search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WRITTEN TEST"

    • கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.
    • தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 10 தாலுக்காவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 10 தாலுக்காவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத ஆயிரக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் 12 ஆயிரத்து 510 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்.

    இன்று காலை 9.30 மணிக்குள் வருகை தந்த தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிந்தது இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 6 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது
    • தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர்

    கோவை,

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

    கோவை மாவட்டத்திலும் கோவை பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்பட 6 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

    தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மையத்திற்கு முன்பாக காத்திருந்தனர். காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மையத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பாக தேர்வர்களை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனா, ஹால்டிக்கெட் உள்ளிட்டவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தனர்.

    தேர்வு மையத்திற்கு செல்ேபான் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டையும் சரிபார்த்து உள்ளே அனுப்பினர்.சட்டையின் கையை மடித்து விட்டிருந்தவர்கள் கீழே இறக்கி விட்டு ெசல்ல அறிவுறுத்தினர்.

    தேர்வர்கள் காலை 9.50 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்கியதும், தேர்வர்களின் ஹால்டிக்கெட் மற்றும் அதில் உள்ள புகைப்படங்கள் விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்த்தனர். தேர்வானது 12.40 மணிக்கு முடிவடைந்தது. தேர்வின் இடையே அதிகாரிகளும் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.

    கோவையில் நடந்த இந்த தேர்வில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 309 பேர் எழுதினர்.

    • 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
    • குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கும், எழுத்து தேர்வு எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, நீலமங்கலம் ஏகேடிமெமோரியல் வித்யா சாகேத் (சி.பி.எஸ்.சி) பள்ளியிலும், சங்கராபுரம் வட்டத்தில் உள்ளகிராமங்களுக்கு, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சின்னசேலம்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, சின்னசேலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, ஏகலைவா அரசு ஆண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு உளுந்தூர்பேட்டை பெஸ்கிமேல்நிலைப் பள்ளியிலும், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    மேற்படி எழுத்து தேர்வுக்கான நுழைவுத் தேர்வு சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இக்குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளத் தெரியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கான நுழைவுச்சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 9 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்ப தாரர்கள் காலை 8.30 மணி முதல் தங்களுக்குரிய தேர்வு மையத்தில் அனு மதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் தேவையற்ற பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் அட்டை, ஒரு புகைப்படம், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனு மதிக்கப்படும்.

    தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றபடுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது
    • வரும் 13-ந் தேதி நடக்கிறது

    கரூர்:

    இந்திய ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு, வரும் 13-ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் என, 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் தொழில்நுட்பம், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், பொதுப்பணி, டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும், 13ல் திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் எழுத்து தேர்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×