என் மலர்
கடலூர்
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீ ஸ்இன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யாதலைமையில்போலீசார்நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழமங்கலம் சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்தனர்.
இது குறித்து ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (20), தாழம்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (21), தூக்கணாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (19), கோகுல்ராஜ் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 5 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
- கருவாட்டு சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே காராமணிகுப்பத்தில் கருவாட்டு சந்தை உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை கூடுவது உண்டு. இந்த சந்தைக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான கருவாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த சந்தையில் கருவாடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் சேலம், ஈரோடு, சென்னை, விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
திருவிழா காலங்களில் இந்த சந்தையில் சுமார் ரூ.25 லட்சம் முதல் 50 லட்சம்வரை கருவாடுகள் விற்பனையாவது உண்டு. ஆனால் இந்த சந்தை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சந்தையில் வியாபாரிகள் தரையில் தார்பாய்களை விரித்துதான் வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கருவாட்டு சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கருவாடு வாங்க வரும் வெளியூர் வியாபாரிகள் முகம் சுளிக்கின்றனர்.
இதுகுறித்து அங்குவந்த பொது மக்கள் கூறுகையில், காராமணிக்குப்பம் கருவாடு சுவையாக இருக்கும், விலையும் குறைவு என்பதால் இங்கு வந்து வாங்கி செல்கிறோம். ஆனால் தற்போது சகதியாக காணப்படுவதால் சந்தைக்குள் செல்ல கஷ்டமாக உள்ளது.
சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், கருவாடுகளை வாங்கி செல்லும் மொத்த வியாபாரிகளுக்கும் வரி விதிக்கின்றனர். சேறும் சகதியுமாக உள்ளதால் வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு இந்த சந்தையை சீரமைக்க வேண்டும் என்றனர்.
- விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர்.
- இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகரில் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துவிட்டு வழக்கம் போல விடுதிக்கு வந்தனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர். இதனை சாப்பிட்டு தங்களது அறைக்கு படுக்க சென்றனர்.
அப்போது ஒவ்வொரு மாணவியாக வெளியில் ஓடி வந்து வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்த விடுதி காப்பாளர் வாந்தி எடுத்த, மயங்கி விழுந்த மாணவிகளை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவே அனுமதித்தார். அங்கு நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும், 15 பேரும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
- நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும், சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது.
கடலூர்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. மேலும் டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது . புயலாக மாறும் பட்சத்தில் புயலுக்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விடிய விடிய மழை பெய்து வந்தது. இதில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம், வேப்பூர், சேத்தியாத்தோப்பு, வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலை நகர், காட்டு மயிலூர், தொழுதூர், வடக்குத்து உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்தது.
இந்த மழை நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும், சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போது குறைந்த அளவில் தண்ணீர் தேங்கி வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழும் பகுதியும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடனும், அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயிலும் இதற்கிடையில் கனமழையும் அதிகாலையில் பணிபொழிவும் மாலையில் குளிர்ந்த காற்று என தொடர்ந்து சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-
காட்டுமன்னார்கோயில் - 78.2, லால்பேட்டை - 55.0,அண்ணாமலைநகர் - 45.0,கடலூர் - 38.4, கொத்தவாச்சேரி - 38.0, ஸ்ரீமுஷ்ணம் - 33.2,சிதம்பரம் - 30.2,கலெக்டர் அலுவலகம் - 27.9, பரங்கிப்பேட்டை - 25.2, புவனகிரி - 25.0, பெல்லாந்துறை - 24.2, குறிஞ்சிப்பாடி - 24.0, வானமாதேவி - 21.8, சேத்தியாத்தோப்பு - 21.6, குப்பநத்தம் - 20.0, கீழ்செருவாய் - 18, பண்ருட்டி - 18.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 17.5, வேப்பூர் - 17.0, விருத்தாசலம் - 16.5, தொழுதூர் - 15.0, காட்டுமயிலூர் - 13.0, லக்கூர் - 7.4, வடக்குத்து - 6.0, மீ-மாத்தூர் - 5.0,என மொத்தம் - 641.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது
- சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.
- ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார்.
கடலூர்:
சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.இவர், கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், தலைமைக் காவலர் கண்ணன் என்பவருடன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, அந்த வழியாக நடந்து வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சீனுவாசன், (வயது42) என்பவரை நிறுத்தி சோதனை செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுநகர் போலீசார், சீனுவாசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலூர்:
திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரிய துறையை கண்டித்து பாஜக சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்வதும்,அப்பகுதியில் இறப்புகள் நேர்ந்தால் அவர்கள் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.
அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பல கட்ட போராட்டங்கள் மனுக்கள் கொடுத்தும் திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8- வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
- சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது.
- பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது. அப்போது விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே வரும்போது பஸ்சில் இருந்த கியர் ராடு உடைந்தது. இதனால் பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர் நடு ரோட்டிலேயே நிறுத்தினார்.
இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவித்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை 5:30 மணியளவில் காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார்பேட்டை ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அதிவிரைவு ெரயில் மோதி பலியானார்.
பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமி (வயது50) அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி (40) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் அவரவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் 1 மாடும் முத்து மகன் அய்யாசாமியின் 2 மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் நடேசன் அவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பின்னர் மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமி மற்றும் முத்து மகன் அய்யாசாமி ஆகிய 2 பேருக்கும் கண்பார்வைs பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்து போன மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது. இதனைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நீர்வரத்து, மழை இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் சரிந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 47 அடியை எட்டி நிரம்பியது. ஏரிக்கு 15,154 கனஅடி நீர் வருகிறது. ஏரியில் இருந்து வடவாறு வழியாக 1,319 கனஅடி நீரும், வி.என்.எஸ் மதகு வழியாக 1,075 கனஅடி நீரும், சென்னை குடிநீருக்காக 65 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
- எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தலங்களில் முதன்மையானதாகும். இக்கோவிலில் சுபமுகூர்த்த தினங்களில் 100 முதல் 300 வரையிலான திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக திருவந்திபுரம் கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி தேவஸ்தானத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டது. கோவில் எதிரில் உள்ள மலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் திருமண விழா சிறப்பாக நடந்தது.
திருமணத்தையொட்டி மண்டபத்தில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. எட்டு திருமண ஜோடிகளும் அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
திருமண விழா இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி தலைமையிலும், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
இதையடுத்து வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திருமண ஜோடிகளின் உறவினர்கள் மணமகிழ்வுடன் அச்சதை தூவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமணம் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு திருமண ஜோடிகளுக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை தாம்புலத்தட்டு, 2 குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை, பெட்ஷீட் ஆகியனவற்றை சீர்வரிசையாக வழங்கினர். இதனை மணமக்கள் மணமகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.
- கடலூர் மாவட்டத்தில் 18 ஏரிகளில் மீன் வளர்த்திட பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்பனைத்திட்டத்தின் கீழ் 18 ஏரிகள் மூன்றாண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வருகிற 14 ந்தேதி மாலை 5 மணி வரை பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து பொது ஏலம் மூலம் 15 ந்தேதி காலை 11 மணியளவில் குத்தகைக்கு விடப்பட உள்ளது. மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள நபர்கள் மீன்பாசி குத்தகை நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்தி பரங்கிப்பேட்டை இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






