என் மலர்
கடலூர்
- 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கடலூர்:
வடலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் செய்வதற்கு பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெருவில் என்.எல்.சி., சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
அத ன்பேரில் பேரில் மாவட்டக் கல்விக் குழுத் தலைவரும் குறிஞ்சி ப்பாடி ஒன்றிய செயலா ளருமான சிவக்குமார் ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதும க்களுக்கு இனி ப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செ ல்வன், 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இளவரசன், கிளைக் கழக செயலாளர் ஆனந்த ராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பி னர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
- துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.
குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார்.
- தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்.
கடலூார்:
பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த 14 வயதுசிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இவரது தந்தையின் நண்பர் பக்கத்து ஊரானகாட்டுக்கூடலூரை சேர்ந்த சோழன்(32 என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்ச்சி அடைந்த சிறுமி அவனை தள்ளிவிட்டு வெளியேஓடி வந்துள்ளார்.
இது குறித்து சிறுமியின்தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில்இன்ஸ்பெக்டர்(பெ) நந்தகுமார், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சுடர்மதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்
- புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
- மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்தவர்கள் நசின்ராஜ், ராஜா. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவ்விருவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் படித்து வருகின்றனர். இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் கடந்த 5-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவி த்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.
இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது துறையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜா தரப்பினரக்கும், அவ்வழியே வந்த நசின்ராஜ் தரப்பிற்கும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர். அப்போது சமாதானம் செய்ய வந்த போலீசார் எதிரிலியே இருதரப்பும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் திட்டக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதானம் பேசி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராஜாவின் உறவினரான துறையூர் கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். துறையூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் 50-பேர் மீதும், நசின்ராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் 37-பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு தரப்பி லும் தலா ஒருவரென 2-பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடலூர் எஸ்.பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின் தலைமையில் தனிப்படை அமைத்து, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பட்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ஜெயலட்சுமி 70. இவர் நேற்று முன்தினம் அங்கு உள்ள கடை ஒன்றில் பால் வாங்க சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையின் அருகே உள்ள பனைமரத்தின் பனை மட்டை கீழே விழுந்து அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர்.
கடலூர்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும். புயலாக மாறினால் மாண்டாஸ் என புயலுக்கு பெயர் வைக்கப்பட உள்ளது . இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனை மீறி ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முழுவதும் சுமார் 30 அடி முதல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தில் டிராக்டர்கள் மூலமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் என மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 1 - ம் எண் தூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
பண்ருட்டி திருநகரை சேர்ந்தவர் சின்னையன் மகள் பிரியா (வயது26). இவர் பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனியாக வீட்டில் இருந்த போது திடீரென்று காணவில்லை. இதனை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அவரது தந்தை சின்னையன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில்இ ன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார் மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.
இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.
பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர்.
- தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடியைச் சேர்ந்த நாத்திகன் என்பவரது மகன் நசின்ராஜ், அதே பகுதியில் உள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் ராஜா. இவ்விருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் இருவரும் படித்து வருகின்றனர். தங்களது கிராமத்திலிருந்து பஸ்சில் ஐ.டி.ஐ.,-க்கு சென்று வருவர். அப்போது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.
இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.
இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் நேற்றிரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அது சமயத்தில் துறையூர் பஸ் நிறுத்தத்தில் ராஜா தரப்பினர் நின்று சம்பவம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூரில் உள்ள நசின்ராஜ்-ன் சமூகத்தை சேர்ந்த ஒரு நபர், ராஜா தரப்பினரை ஜாதியை சொல்லி தகாத வார்த்தையில் (அசிங்கமாக) திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர். தகவலறிந்த துறையூரைச் சேர்ந்த இரு சமுகத்தினரும் துறையூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பெண்ணாடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்கு கட்டுப்படாத இரு தரப்பும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, சுப்பரமணியன், கோதண்டராமன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு துறையூரைச் சேர்ந்த இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருபிரிவினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் சக்திகணேசன், இரு சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தார். மேற்கொண்டு தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜாவின் உறவினரான துறையூர் தி.மு.க. கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் மின் கசிவினால் வீடு தீப்பிடித்ததா, யாரேனும் கொளுத்தி விட்டனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை அருகே பைப் எலக்ட்ரிகல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை பாலகுரு என்பவர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகுரு பணம் வைத்திருக்கும் பெட்டி சென்று பார்த்தபோது பெட்டி யை உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 7000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாலகுரு திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடத்த கடையை பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைக்காமல் கடையின் பின்புறம் இருந்த தகர கூறையை உடைத்து கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






