சிதம்பரத்தில் ஓடையில் மிதந்த ஆண் பிணம்

6 தீயணைப்பு வீரர்கள் பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.
சிதம்பரத்தில் ஓடையில் மிதந்த ஆண் பிணம்
Published on

கடலூர்:

சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com