என் மலர்
கடலூர்
- சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
- அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே கண்டியாமேடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நாகாயாள் (வயது 75) இந்நிலையில் இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை ஒட்டி வந்த அருண்குமார் காரை விட்டு இறங்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள்.
- போலீசார் சம்பவ இடத்திலிருந்து வீச்சரிவாள், 2 டீ சர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர்.
வடலூர்:
வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). இவர் வடலூர் தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு பார்வதிபுரத்தில் உள்ளவீட்டில் இருந்து, தனது காரில் வடலூருக்கு வந்தார்.
அந்த காரை இவரது நண்பரும், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (39) ஓட்டி வந்தார். கார் வடலூர் அரசு பிற்படுத்தப்பட்ட பெண்கள் விடுதிக்கு பின்புறம் வந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காரை வழிமறித்து தமிழ்செல்வனை வெட்ட முயன்றனர், இதில் கார் கண்ணாடி உடைந்தது.
அப்போது காரை ஒட்டி வந்த அருண்குமார் காரை விட்டு இறங்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள். தலையில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க. நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வடலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உட்கட்சி பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீசார் சம்பவ இடத்திலிருந்து வீச்சரிவாள், 2 டீ சர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர். தமிழ்ச்செல்வன் நகர செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் வடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காவலாளியை தாக்கி பணம் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அடையாளம் தெரியாத 3மர்ம நபர்கள் திடீரென்று அயூப்கானை வழிமறித்து பணம் கேட்டனர்.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடி பகுதியில் தனியார் கடை உள்ளது. இங்கு பண்ருட்டி மேல் கவரப்பட்டை சேர்ந்த அயூப்கான் (வயது 52) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தொன்று அயூப்கான் வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3மர்ம நபர்கள் திடீரென்று அயூப்கானை வழிமறித்து பணம் கேட்டனர். அப்போது அயூப்கான் பணம் தர மறுத்தார். இதனால் 3 மர்ம நபர்கள் அவரை தாக்கியதில் சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
இதனை தொடர்ந்து 3 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த ஏ.டி.எம்கார்டு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து அயூப் கான் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை வலைபேசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரின் 3 ேபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மற்றும் எஸ்.என்.சாவடி சேர்ந்த எலி என்கின்ற சக்திவேல் (வயது 20) ஆகியோர் காவலாளியிடம் பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டை பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும்.
- 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர்.
கடலூர்:
மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 42 புயல் பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன . இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தால் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடும் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர், மின்சாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 241 ரேஷன் கடைகளில் சுமார் 750 டன் அரிசி பேரிடர் காலத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்கப்பட உள்ள பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 241 ரேஷன் கடைகள் இருக்கக்கூடிய பகுதிகள் அதிக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கும் சமயத்தில் எளிமையாக ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கொண்டு சென்று மக்களுக்கு உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பேரிடர் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் அரிசிகள் இருந்தால் ஜனவரி மாதம் முதல் அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும். ஆகையால் இதன் மூலம் பொது மக்களுக்கு மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார்.
- மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு (வயது 17) ஐடிஐ மாணவர். இவர் கடந்த 22 ஆம் தேதி ஐடிஐ பாலிடெக்னிக் ஆசிரியர் தோட்டத்தில் தேங்காய் பறிக்க அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அரசிற்கு நீதி வழங்க வேண்டும் என்று ஒன்று திரண்டு பாலிடெக்னிக் முன்பு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொது மக்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக சுமார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்களை வாணியம் பாளையத்திலிருந்து 2 மினி லாரிகளில் பண்ருட்டிக்கு அழைத்து வந்த மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
- பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்.
- இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தற்போது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 49 மீனவ கிராமங்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக மாண்டஸ் புயல் உருவானது முதல் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் ஓரமாக உள்ள அனைத்து படகு களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது. வழக்கத்தை விட அதிக அளவில் கடல் அலை சீற்றம் காணப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் காற்று அதிக அளவில் வீசினால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க வேண்டும். அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது. மேலும் கடல் பகுதியில் சுமார் 14 அடி உயரத்திற்கு கடல் அலை ராட்சத அலையாக மாறி கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. அதன் காரணமாக சுமார் 50 அடி முதல் 60 அடி கடல் அலைகள் முன்னோக்கி வந்து செல்வதால் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் அனைத்தையும் காலை முதல் மீனவர்கள் ஊர் பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ராட்சத அலை மற்றும் கடல் நீர் முன்னோக்கி வந்து செல்வதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது.
- ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் இருந்து கயிறு மூலமாக ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது.
- கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.
கடலூர்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதில் புயலுக்கு மாண்டாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி இருந்த நிலையில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு புயல் உருவாகி உள்ளது என்பதனை அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.
மேலும் கடலூர் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக 30 அடிக்கு முன்பு நிறுத்தப்பட்ட இடத்திற்கு கடல் அலை வந்து செல்வதால் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அவசர அவசரமாக படகுகளை சற்று முன்னோக்கி கொண்டு செல்வதையும் காண முடிந்தது.
இன்று முதல் கடல் பகுதியில் காற்றின் வேகமும், அலையின் சீற்றமும் அதிகரிக்கும் என்ற நிலையில் தற்போது கடல் அலை வழக்கத்தை விட அதிக அளவில் முன்னோக்கி வருவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் சமயத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்து வருகிறார்கள்.
மேலும் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லேசான காற்றும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலூர்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில், பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதியன்று, சென்னை, திருச்சி, சேலம், கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி வரும் 14-ந் தேதி சென்னை, திருச்சி, சேலம், கடலூர் மதுரை ஆகிய இடங்களில்மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு அறிக்கையில் உள்ளது.
- திட்டக்குடியில் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவும், மேலும் யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது. அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8 வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவுத்திருந்தனர்.
இந்நிலையில் இது வரை நகராட்சி நிர்வாகமும் மின்வாரியத்துறை அதிகாரிகளோ யாரும் அழைத்துப் பேசாததால் 8வது வார்டில் ஒப்பாரிவைக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திட்டக்குடி நகராட்சி தலைவர்வெண்ணிலா கோதண்டம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து இரண்டு நாட்களில் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நான் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.
- பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி, திருவதிகை சேர்ந்தவர் ராதா (வயது 50), வாணி (47). இருவரும் அக்காள்தங்கை. ராதாவின் கணவர் இறந்து விட்டதால் தங்கைவாணியுடன் வசித்துவந்தார். எனக்கு யாரும் இல்லை நான்உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் எனஅடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வந்த ராதா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கோர்ட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- கையெழுத்து வாங்க முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வெங்கடேசன் இளநிலை கட்டளை நிறை வேற்றுபவராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் வழங்குவதற்காக கடலூர் தென்னம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் நோட்டீசை கொடுத்து அசலில் கையெழுத்து வாங்க, முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
அப்போது செல்வியின் கணவர் விஸ்வநாதன், வெங்க டேசனை வழி மறித்து அவரது மனைவி கையெழுத்து போட்டு கொடுத்த நகலை பிடுங்கி கொண்டதுடன் அவர் கையில் வைத்திருந்த நீதிமன்ற செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியினையும் பிடுங்கி மிரட்டி நீதிமன்ற பணியை செய்யவிடாமல் தடுத்து ள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தூக்கணா ம்பாக்கம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் விஸ்வநாதன் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






