என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு: காவலாளியை தாக்கி பணம் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
- காவலாளியை தாக்கி பணம் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அடையாளம் தெரியாத 3மர்ம நபர்கள் திடீரென்று அயூப்கானை வழிமறித்து பணம் கேட்டனர்.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடி பகுதியில் தனியார் கடை உள்ளது. இங்கு பண்ருட்டி மேல் கவரப்பட்டை சேர்ந்த அயூப்கான் (வயது 52) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தொன்று அயூப்கான் வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3மர்ம நபர்கள் திடீரென்று அயூப்கானை வழிமறித்து பணம் கேட்டனர். அப்போது அயூப்கான் பணம் தர மறுத்தார். இதனால் 3 மர்ம நபர்கள் அவரை தாக்கியதில் சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
இதனை தொடர்ந்து 3 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த ஏ.டி.எம்கார்டு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து அயூப் கான் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை வலைபேசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரின் 3 ேபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மற்றும் எஸ்.என்.சாவடி சேர்ந்த எலி என்கின்ற சக்திவேல் (வயது 20) ஆகியோர் காவலாளியிடம் பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டை பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்தனர்.






