திட்டக்குடியில் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க வினர் போராட்டம்

திட்டக்குடியில் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவும், மேலும் யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது. அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8 வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவுத்திருந்தனர்.

இந்நிலையில் இது வரை நகராட்சி நிர்வாகமும் மின்வாரியத்துறை அதிகாரிகளோ யாரும் அழைத்துப் பேசாததால் 8வது வார்டில் ஒப்பாரிவைக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திட்டக்குடி நகராட்சி தலைவர்வெண்ணிலா கோதண்டம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து இரண்டு நாட்களில் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com