என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை, செல்போன் திருடப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் அருகே உள்ள பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 32). சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் தனது ஊருக்கு செல்வதற்காக ஏறினார். பின்னர் ஸ்ரீவித்யா தனது கட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பொருட்களை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.
இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா உடனடியாக பஸ் முழுவதும் பொருட்கள் உள்ளதா? என தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை. இது மதிப்பு சுமார் 90 ஆயிரமாகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினார்களா? அல்லது பொருட்கள் எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது.
- ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த அழகிய நத்தம் காலனியை சேர்ந்த வர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு தொகு ப்பு வீட்டில் மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்து அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையில் காயமடைந்த ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆதிலட்சுமிக்கு டாக்டர்கள் உடனடி யாக சிகிச்சை அளித்த னர்.
ஆதிலட்சுமி வசித்து வந்த தொகுப்பு வீட்டில் ஏற்கனவே ஆங்கா ங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக கட்டிடம் மழை நீரில் ஊறி மீண்டும் சிமெண்ட் காரைகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தூக்கணா ம்பாக்கம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
- வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
- கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமி ழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் தமிழக அரசு விருது, 2023-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று வழங்குவற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதினை பெற விரும்புவோர் இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று க்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13 ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்பலாப்பட்டு மற்றும் சாத்திப்பட்டுகிராமங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.
- சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
- 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன.
கடலூர்:
மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் பகுதியில் சுமார் 60 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சுமார் 14 அடி உயரம் உயர்ந்து, கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல க்கூடாது என மீன்வ ளத்துறை அதிகா ரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் இதனை மீறி மீனவர்கள் யாரேனும் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பாதுகாப்பாக முன்னோக்கி கொண்டு வந்து வைத்தனர்.
மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இது மட்டுமின்றி கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்றுடன் இயல்புகள் நிலைக்கு கடல் பகுதி திரும்பியதால் மீனவர்கள் இன்று 11-ந் தேதி முதல் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீனவளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்றனர். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் நள்ளிரவு முதல் ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்து கடலூர் துறைமுகம் மற்றும் கரைக்கு ஆர்வமுடன் கொண்டு வந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது.
- மதுராபரிசமங்களம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவரது 7 மாத பசுகன்றுகுட்டி இறந்துவிட்டது.
- கவியரசு உத்தரவுபடி பேரூராட்சி மூலம்அகற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டியில் மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. நேற்று நடுமேட்டுக்குப்பத்தில் வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதேபோல மழை காரணமாக பண்ருட்டி வட்டம் கீழ்அருங்குணம் மதுரா பரிசமங்களம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவரது 7மாதபசுகன்றுகுட்டிஇறந்துவிட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசி ல்தா ர்வெற்றிவேல்கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடை களுக்குஉரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மழை காரணமாக உயிரிழந்த கன்றுகுட்டி பிரேத பரிசோதனை அறி க்கையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில்மழை மற்றும் இயற்கை சீற்றங்களால்எந்நேரமும் வீடுகளை பாதிக்கு ம்வகையில் 30வருடம்ப ழமையான மரம்ஒன்று உள்ளது. இந்த மரத்தினை வருவாய்கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உத்தரவுபடி பேரூராட்சி மூலம்அகற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு மதுரா துண்டுகாடு என்ற பகுதியில் வசித்து வரும் கலியபெரு மாள்என்பவருடைய கூரை வீடு மழையின் காரணமாக இடிந்துவிழுந்து சேதம் அடைந்தது .தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்வெற்றிவேல் நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
- பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
- கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.
கடலூர்:
வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று கடலில் சுமார் 14 முதல் 16 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலை காரணமாக 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றது.
கடலூர் அடுத்த சுபஉப்பலவாடி கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க இரண்டு ஏக்கருக்கு மேலாக சவுக்கு மரங்கள் மற்றும் கடற்கரை ஓரமாக பனை மரங்கள் இருந்து வந்தன.
ஏற்கனவே இந்த கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.கடந்த 2 நாட்களாக கடல் அலை சீற்றம் ஆர்ப்பரித்து வந்த காரணத்தினால் கடல் அலை முன்னோக்கி வந்து கடற்கரை ஓரமாக அமைந்திருந்த சாலைகள் சிறிதளவு அடித்து செல்லப்பட்டன. மேலும் கடற்கரை ஓரமாக அமைத்திருந்த பனை மரங்கள் முழுவதும் சாய்ந்து கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து சவுக்கு மரங்களும் தற்போது அடித்து செல்லப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவு சவுக்கு மரங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தொடர் கடல் சீற்றம் காரணமாக சுப உப்பலவாடி கடற்கரை பகுதி முழுவதும் உருக்குலைந்து வருகின்றது. நாளடைவில் தொடர் கனமழை மற்றும் கடன் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது மட்டும் இன்றி அந்த பகுதியில் விவசாயத்தை நம்பி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் மக்கள் திடீரென்று கடல் நீர் வந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாவதோடு உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது என பொதுமக்கள் குமுறி வருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகத்தினர்களோ கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதற்கு ஏற்ப பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக புகார் அளித்து வந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பெருமளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் இழப்பு மற்றும் நிலப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விவசாய முற்றிலும் பாதித்த பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் என்ன? எடுக்காமல் இருந்தால் என்ன? என சமூக ஆர்வலர்கள் கடும் குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
- மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.
கடலூர்:
திட்டக்குடி அரசு தலைமை மருத்துவஅலுவலர் டாக்டர் சேபானந்தம் மேற்பார்வையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய்ள கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது58), இவர் பைக்கிலிருந்து தானகவே தவறி விழுந்து வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்ததை கணினி உதவியுடன் இயங்கும் ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
திட்டக்குடி அரசு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் கிருத்திகா, அறுவை அரங்கு செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி காயத்ரி (வயது 24) இவர் இன்று காலை விளாம்பாவூரிலிருந்து காட்டு மயிலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுமயிலூரிலிருந்து வேப்பூருக்கு சென்றார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற காயத்ரி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றார். அப்போது காயத்ரி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இது குறித்து காயத்ரி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமராவை ஆராய்ந்து செயினை பறித்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றார்.
- கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
- கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவுகாற்றுடன் கன மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
காற்றுடன் கூடிய கன மழைபெய்ததால் பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்றுவேரோடு சாய்ந்து விழுந்தது இதனால் நேற்று இரவு அங்கு நடந்த ஐயப்பபக்தர்கள் கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது
- இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
- சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.






