என் மலர்tooltip icon

    கடலூர்

    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது .
    • நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கி காலை வரை நீடித்தது.

    கடலூர்: 

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இந்த புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள்பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக கடும் குளிரால் கடலூர் பொதுமக்கள் அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதியது .

    மேலும் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் செல்லக்கூடாது என்ற அதிகாரிகளின் அறிவிப்பால் குழம்பினர். நேற்று முதல் திட்டவட்டமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்ற அதிகா ரிகளின் அறிவிப்பால் சந்தோஷமாக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் தற்போது அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த காற்றழுத்த பகுதி எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் உள்ளது.

    கடலூரிலும் நேற்று மாலை முதல் வானில் கருமயங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இரவு முழுவதும் கடலூரில் மழை பெய்தது. நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு ,திருவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- கடலூர் - 46.8 தொழுதூர் - 46.0 சேத்தியாதோப்பு - 43.2 பரங்கிப்பேட்டை - 41.8 கலெக்டர் அலுவலகம் - 39.6 சிதம்பரம் - 28.8 பெல்லாந்துறை - 28.0 அண்ணாமலைநகர் - 26.0 கொத்தவாச்சேரி - 20.0 வடக்குத்து - 17.0 லால்பேட்டை - 17.0 வானமாதேவி - 13.6 காட்டுமன்னார்கோயில் - 13.0 லக்கூர் - 13.0எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 10.0 புவனகிரி - 9.0 ஸ்ரீமுஷ்ணம் - 8.1 கீழ்செருவாய் - 8.0 பண்ருட்டி - 7.6 குறிஞ்சிப்பாடி - 6.0 குப்பநத்தம் - 1.2

    • வ.மேட்டூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பஸ் வசதி வேண்டுமெனக் கூறி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுப்பாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை. இதனால் தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்லும் சிறு, குறு விவசாயிகள், வணிகர்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் நடந்து சென்று பனையாந்தூர் அல்லது வள்ளிமதுரம் கிராமத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமெனக் கூறி இன்று காலை திட்டக்குடியில் இருந்து நைனார்பாளையம் வரை செல்லும் அரசு பஸ்சை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறைப்பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வெளியூருக்கு செல்வதற்காக பஸ்சில் காத்திருந்த பயணிகளின் நலன் கருதி தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.

    • அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி வேலை நிறுத்தம்.
    • அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே . கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிவரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான கூட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயின் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    • அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.

    கடலூர் :

    வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.

    அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    • ௩ பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரங்கி தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார்.
    • அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கும்ப லை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார். 

    அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 35). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று கெடிலம் அருகே உள்ள கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த பகுதியில் வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது .
    • முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது . இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடியது.

    பண்ருட்டி - சென்னை சாலையில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோண ம்சாலையில் கொ ள்ளு காரன்குட்டைவரையிலும் கனமழை காரணமா ககுண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.  எல்.என்.புரம்,கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில்அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
    • நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது. அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது.

    அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

    மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.

    இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.

    இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.

    ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×