search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus arrests"

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாக புகார் மனு அளித்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர்களால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என கூறினர்.

    எனவே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் வேப்பூர் -பெண்ணாடம் சாலையில் வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனி பாபு மற்றும் ஆவினங்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை செய்து ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அதற்கான பணிகளை துவங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • வ.மேட்டூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பஸ் வசதி வேண்டுமெனக் கூறி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுப்பாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை. இதனால் தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்லும் சிறு, குறு விவசாயிகள், வணிகர்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் நடந்து சென்று பனையாந்தூர் அல்லது வள்ளிமதுரம் கிராமத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமெனக் கூறி இன்று காலை திட்டக்குடியில் இருந்து நைனார்பாளையம் வரை செல்லும் அரசு பஸ்சை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறைப்பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வெளியூருக்கு செல்வதற்காக பஸ்சில் காத்திருந்த பயணிகளின் நலன் கருதி தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.

    ×