என் மலர்
கடலூர்
- கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
- சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.
கடலூர்:
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், புயலாக மாறினால் தமிழகத்தை யொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிரும் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 6-ந்தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில் 11-ந்தேதி காலையில் திடீரென்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் 12-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீண்டும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் ஓய்ந்த நிலையில் கடலில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. ஆனால் திங்கட்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 15 ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் . மேலும் வங்க கடல் பகுதிகளில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்திரும்ப வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
- கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்
கடலூர்:
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெய்வேலியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
நெய்வேலி நகர பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பெரியார் சதுக்கம் அருகில் பாரதி நகரை சேர்ந்த ராமஜெயம் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அப்போது அவரது கடையில் சுமார் 10000 மதிப்புள்ள 800 புகையிலை பாக்கெட் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.
- சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ . மருர் கிராமத்தில் தொடர்ச்சியாக கனிம வள கொள்ளை நடப்பதாகவும் டிராக்டரில் கிராவல் எடுத்துச் சொல்வதாகவும் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலருக்கு கிராவல் கொள்ளை பற்றி ஏ. மருர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகர் தகவல் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக கிராவலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க சேகர் தான் காரணம் எனக் கூறி இதில் ஆத்திரம் அடைந்த கனிம வள கொள்ளைகள் ஈடுபடும் கும்பல் சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சேகர் அவரது உறவினர்கள் 3 பேர் பலத்த காயமடைந்து கள்ளக்கு றிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- வாகனங்களை அப்புறப்படுத்தாததால் டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
- சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரசிகர்களின் வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அவர்களது இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியதாலும், வாகனத்தை தாறுமாறாக நிறுத்தியதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்துமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர். இருப்பினும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அங்கு வந்திருந்த டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
அதன்பிறகு டிடிஎஃப் மீண்டும் புறப்படும்போது அதேபோல் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியபடி அந்த பகுதியில் சென்றனர். அப்போது புதுபாளையம் ஆற்றங்கரை பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது அந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளனது.
அதன் பிறகு போலீசார் அந்த பகுதியில் இதுபோன்ற அதிகப்படியான ஒலிஎழுப்பிய வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் என 200க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை கைப்பற்றி அவர்கள் மீது வழங்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள வாகனங்களின் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டன.
தற்போது யூடியூபர் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர்.
- போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர்.
கடலூர்:
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழங்குடி, இருளர் உள்ளிட்ட அனைத்து நலிந்த பிரிவினருக்கும் விரைவில் ஜாதி சான்றிதழ், மனைப்பட்டா, நல வாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சாதி சான்றிதழுக்கு இணையவழி அல்லாமல் நேரடியாக மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர் பாபு, தலைவர் சிவகாமி மற்றும் நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று திட்டமிட்டபடி சென்னைக்கு நடை பயணமாக செல்வோம் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, சட்ட ஆலோசகர் வக்கீல் திருமேனி, தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நடைபயணமாக செல்வதற்கு தயாரானார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பெண் மயக்கம் அடைந்து சாலையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு குடிநீர் வழங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர். இதில் 30 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது.
- பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நாளை மறுதினம் மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் தொடங்கிய குளிர்காற்று காலை வரை வீசி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது.
இதன் காரணமாக கடலூர், பாதிரிகுப்பம், திருவ ந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் காலை 7.30 மணி வரை பனி குறையாமால் காணப்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு எரிந்த படியும், ரயில்வே தண்ட வாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்து ள்ளதால் ரயில்களும் முகப்பு விளக்கு அணிந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சீதோஷ்ண மாற்றம் உருவாகி பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.
- சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது.
- ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திடீரென சாலையின் குறுக்கே திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதாமல் இருக்க வலது புறம் திருப்பினார். இதில் சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் சிறுகாயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ் பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் 13- ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த திருப்பாதிரிப்புலியூர் சஞ்சய் (வயது 21) நெய்வேலி அஜய் (26) , பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு 17 வயது சிறுவன், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த பாலாஜி (31), அருண்குமார் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் குட்கா விற்பனை செய்த கடலூர் ஜெயபிரகாஷ் (55), புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல்(46). பாரதிராஜா(27), சோழதரம் ராஜசேகர்(52). நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன்(50), வேப்பூர் செல்வராஜ் (48). மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55), ஆகிய 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து, இவர்களிடமிருந்து 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவரிடம் இருந்து ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பெருமுளை சாலையோரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்துகொண்டு இருப்பதாக திட்டக்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு அரசு டாஸ்மாக் கடை எதிரில் கோழியூரை சேர்ந்த மணிகண்டன் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், முதுநகர், காடாம் புலியூர் ஆகிய பகுதிகளில் 240 கிராம் கஞ்சாவும், மங்க லம்பேட்டை, கருவேப்பி லங்குறிச்சி, புதுப்பே ட்டை, ஸ்ரீமுஷ்ணம், நெல்லிக்கு ப்பம், ஆலடி ஆகிய பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர். இதில் கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் சூர்யா (26), சிதம்பரம் நடராஜன் (41), கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் (22), பணிக்கன் குப்பம் நவீன் (21), கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ராகுல் (21), ஆகியோரை கஞ்சா வழக்கிலும், மங்கலம் பேட்டையை சேர்ந்த அக்பர் அலி (51), சிவகலை (34) என்ற பெண், கருவேப்பி லங்குறிச்சி காசிநாதன் (55), பண்ருட்டி ஏழுமலை (61), ஸ்ரீமுஷ்ணம் ராஜதுரை (61), நெல்லிக்குப்பம் கணபதி (50), விருத்தாச்சலம் வீரா ரெட்டி குப்பம் பீட்டர்நாயகம் (64) ஆகியோரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கிருஷ்ணவேணி மது விற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்து அவரை கைது செய்தது.
கடலூர்:
பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், தலைமை யிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த பாரதி நகரில்அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 65) மது விற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டி ல்களை பறிமுதல் செய்தனர் .அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






