வடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.
வடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
Published on

கடலூர் :

வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.

அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com