கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமி ழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் தமிழக அரசு விருது, 2023-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று வழங்குவற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதினை பெற விரும்புவோர் இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று க்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13 ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com