பண்ருட்டி அருகே தேனீ கொட்டி மூதாட்டி பலி

பனைமரத்தின் பனை மட்டை கீழே விழுந்து அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது.
பண்ருட்டி அருகே தேனீ கொட்டி மூதாட்டி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே பட்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ஜெயலட்சுமி 70. இவர் நேற்று முன்தினம் அங்கு உள்ள கடை ஒன்றில் பால் வாங்க சென்றுள்ளார்.

அப்போது அந்த கடையின் அருகே உள்ள பனைமரத்தின் பனை மட்டை கீழே விழுந்து அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com