search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே  சாலை ஓரம் பிணமாக  கிடந்த முதியவர்
    X

    திட்டக்குடி அருகே சாலை ஓரம் பிணமாக கிடந்த முதியவர்

    சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.

    இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×