வேப்பூர் அருகே இடி மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு; 2 பேருக்கு கண் பார்வை பாதிப்பு

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கியது.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.
Published on

 கடலூர்:

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமி (வயது50) அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி (40) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் அவரவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் 1 மாடும் முத்து மகன் அய்யாசாமியின் 2 மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் நடேசன் அவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பின்னர் மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமி மற்றும் முத்து மகன் அய்யாசாமி ஆகிய 2 பேருக்கும் கண்பார்வைs பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்து போன மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com