விருத்தாசலத்தில் கியர் உடைந்து நடு ரோட்டில் நின்ற அரசு பஸ்

சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது.பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்:

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது. அப்போது விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே வரும்போது பஸ்சில் இருந்த கியர் ராடு உடைந்தது. இதனால் பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர் நடு ரோட்டிலேயே நிறுத்தினார்.

இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவித்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com