search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avvaiyar Award"

    • பெண்கள் அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
    • இந்த விருது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர் : 

    பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த பெண்கள் அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- சா்வதேச மகளிா் விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-ம் ஆண்டுக்கானஅவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும்.

    சமூக நலனை சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கைகள், சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு 2024-ம் ஆண்டுக்கான அவ்வையாா் விருது வழங்கப்படுகிறது.எனவே விருது பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா். 

    தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

    கடலூர்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் 8 கிராம் தங்கபதக்கமும், 1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்

    குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டு ம். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது பெற்ற வருடம் தெரிவிக்க வேண்டும். சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்கள் மற்றும் விரிவான அறிக்கை தெரிவிக்க வேண்டும். சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.

    சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.

    விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துரு க்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடு த்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
    • மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றுவபராக இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருது பெறுவோ ருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சத் திற்கான காசோலை மற்றும் சான்றிதழ், சால்வை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards.tn.gov.in) வழியாக வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும்.

    அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை அனுப்புபவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுவபராக இருத்தல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு வழங்கப்படுகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். இவ்விருதினைப்பெற https://awards.tn.gov.in எனும் இணையத் ளத்தில் விண்ணப்பிக்கலாம். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருது பெறுவதற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலம் சார்ந்த நடவடிக்கை கள் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றதுறைகளில் மேன்மையான முறை யில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றி இருக்க வேண்டும். டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையத ளத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கையொப்பத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகம், பி-பிளாக், முதல் தளம், மாவட்ட ஆட் சியரகம், திருப்பத்தூர் என்ற முகவரியில் உரிய தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அமர் குஷ் வாஹா தெரிவித்துள்ளார்.

    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பில்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை பெருமாள் களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 30 வருடங்களாக கிராமப்புற ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறார்.

    2 ஆயிரத்து 589 சுய உதவிக்குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இதைத் தவிர அவர் கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திற்காக இலவச மருத்துவ முகாம்கள், வேளாண்மை சார்ந்த பணிகளில் பெண்களை மேம்படுத்துவதற்காக, இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை ஊக்கப்படுத்தி பெரும் பங்காற்றியுள்ளார்.

    அவருடைய மகளிர் மேம்பாட்டுப் பணிகளை பாராட்டி 2000-ம் ஆண்டு மத்திய அரசு, ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது வழங்கியுள்ளது.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பெ.சின்னப்பிள்ளை பெருமாளை கவுரவிக்கும் பொருட்டு, 2018-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வையார் விருதை வழங்கினார். விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    அவ்வையார் விருதை பெற்றுக்கொண்ட சின்னப்பிள்ளை பெருமாள், தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக்கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×