கடலூரில் துணிகரம்: கடையின் பூட்டை உடைத்ததை தட்டி கேட்ட பெண் மானபங்கம் 3 பேர் மீது வழக்கு

அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர்.
கடலூரில்  துணிகரம்: கடையின் பூட்டை உடைத்ததை தட்டி கேட்ட பெண் மானபங்கம் 3 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர். அப்போது அங்கு வந்த மகாலட்சுமி இதனை தட்டி கேட்டபோது, அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயம் அடைந்த மகாலட்சுமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மகாலட்சுமி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சமூர்த்தி, பாண்டியன், சிவக்கொழுந்து ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com