search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb experts"

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
    • பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . 

    இப்பணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லியோ மற்றும் பீட் ஆகிய மோப்ப நாய்களுடன் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருவதோடு, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அந்தந்த ெரயில் நிலையங்களில் ெரயில்வே போலீசார் வெடிகுண்டு கருவிகள் கொண்டு ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    • விழுப்புரத்தில் ெரயில் நிலையத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 75- வது சுதந்திர தினத்தை வருகிற 15 -e; தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிய சக்திகள் ஊடுறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு விமான நிலையம் ெரயில்நி லையம் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சென்றால் அவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் ெரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் விழுப்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் விழுப்புரம் மாவட்ட வெடிபொருள் பிரிவு போலீசார் விழுப்புரம் ெரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைபாதை மற்றும் அங்குள்ள அறைகளிலும் சோதனை செய்தனர்.பின்னர் ெரயில்வே நிலையத்திற்கு வரும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிகின்றனர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்கின்றனர்.

    அதன் பின்னர் இன்று காலை சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ெரயில் விழுப்புரம் வழியாக சென்றது. அப்போது பாதுகாப்பு படை போலீசார் ரயில் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது. மேலும் இந்த தொடர் சோதனை வருகிற திங்கட்கிழமை வரை நீடிக்கும் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். 

    ×