search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akal Lamps"

    • மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
    • ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன.

    கடலூர்:

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்தன. கார்த்திகை மாதத்தில் தீப திருநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி வீடுகள், கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு. இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாள் வருகிற 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம், மஞ்சகுப்பம், செம்மண்டலம், திருப்பாதி ரிப்புலியூர் மற்றும் சன்னதி தெரு, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கடைகளிலும் வைத்து அகல் விளக்குகள் விற்கப்படுகிறது. சாலை ஓரங்களில் வியாபாரிகள் அகல் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் அகல் விளக்குகள் தயாரி க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தயாராகும் அகல் விளக்குகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''கார்த்திகை தீப திருவிழாவுக்கு தற்போது அகல்விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளது பெரிய வியாபாரிகளிடம் சிறு வியாபாரிகள் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் அளவுக்கு தகுந்தாற்போல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதே அகல் விளக்குகள் தற்போது ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதனையும் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தீப திருநாளுக்கு முந்தைய நாட்களில் அகல்விளக்கு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

    ×