search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டகுடி அருகே  அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து:   டிரைவர் படுகாயம்
    X

    விபத்தில் சிக்கிய லாரியை படத்தில் காணலாம்.

    திட்டகுடி அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

    • திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
    • கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.

    இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.

    Next Story
    ×