என் மலர்tooltip icon

    கடலூர்

    • பக்தவச்சலம் குச்சியால் தூக்கி பிடித்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது‌‌.
    • பக்தவச்சலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர் :

    கடலூர் அடுத்த பில்லாலி சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 55) . தொழிலாளி.அதே பகுதியை சேர்ந்தவர் மணி. சம்பவத்தன்று கோவில் திருவிழா காரணமாக சாமி ஊர்வலம் வரும்போது பக்தவச்சலம் மணி வீட்டின் முன்பு இருந்த மின் ஒயர் தடுத்ததால் அதனை பக்தவச்சலம் குச்சியால் தூக்கி பிடித்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மணி உட்பட 3 பேர் பக்தவச்சலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மணி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரவி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி சென்று உள்ளார்.
    • இது குறித்து கண்ணன் தனது மனைவி சரோஜாவிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சரோஜா (வயது 58) இவர்கள் வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி சென்று உள்ளார். இது தொடர்பாக கண்ணன், ரவியிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ரவி ,கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் தனது மனைவி சரோஜாவிடம் தெரிவித்தார். அப்போது இது தொடர்பாக சரோஜா, ரவியிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ரவி சரோஜாவை தாக்கி மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சரோஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
    • மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன் ஹரிகரன் (13) சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ராமநாதன்குப்பம் பகுதியில் சுமார் 40 அடி உயர தண்ணீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பட்டத்தின் நூல் அறுந்தது. உடனே பட்டத்தை பிடிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மீது ஓடிய ஹரிகரன் கால் தவறி எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து கீழே விழுந்தான். பயங்கர சத்தத்துடன் அலறி கொண்டு தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வலியால் உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது.
    • இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெய்தல் கோடை விழாவை தொடங்கி வைத்து மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசுகையில், கடலுார் சில்வர் பீச்சில் அடுத்தாண்டு நடக்கும் விழாவில், பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். தோட்டக்கலைத் துறை மூலமாக நெய்தல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தருமாறு கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது.

    நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடக்கும் ஹேப்பி ஸ்டீரிட் விழாவைப் போன்று, கடலுாரில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கோடை விழா நடத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்திற்கு கடந்தாண்டு 19 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த மாதம் வரை 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது ஜெகதீஸ்வரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகர தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி, ஆராமுது, ஹேமலதா சுந்தரமூர்த்தி, சாய்ந்துனிஷா சலீம், பார்வதி, சசிகலா ஜெயசீலன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா ரங்கநாதன், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், கார் வெங்கடேசன், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
    • டிரைவர் விக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    வேலூர் மாவட்டம் திருப்ப த்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் மனைவி பரிமளா (வயது 40), மகன் தருண்ராஜ் (19). உடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது. அப்போது கார் டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பழனிவேலின் மனைவி பரிமளா, மகன் தருண்ராஜ் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட விக்கியை சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் தருண்ராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் விக்கிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பழனிவேலை அவரது உறவினர்கள் மேல்சிகி ச்சைக்காக பங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 3 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார்.
    • குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார். சிதம்பரம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தகுதிச் சான்று பெறாமல் சென்ற வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல வாகனங்களில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவையும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. ஒரே நாளில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் 6 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறியதாவது:-

    ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது. எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வாகனங்களை குறித்து கவலைப்படுவதில்லை. அதே போல பெற்றோர்களும் வாகனத்தின் தரம் குறித்து கவலைப்படுவதில்லை . இந்த விஷயத்தில் பெற்றோர் பள்ளி நிர்வாகம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. தகுதி சான்று வழங்கிய வாகனங்களின் இடது புறத்தில் அந்த வாகனத்தின் அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். பெற்றோர்கள் அதனைப் பார்த்து வாகனத்தின் தரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தகுதி சான்று இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக இல்லாமல் இருந்தால் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • பிரகாஷ் என்பவருக்கும் விஜிக்கும் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ந டைபெற்றது.
    • திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை நேருஜி வீதியை சேர்ந்தவர் விஜி (33) .இவருக்கும் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 23ம் தேதி அங்குசெட்டி ப்பாளை யத்தில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம்ந டைபெ ற்றது.இந்தநிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் திருமண நாள் பற்றி கேட்டுள்ளனர் . அப்போது மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும்வரதட்சனையாக 10 பவுன் கேட்டு அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மணமகள் விஜியின் அண்ணன் கோவிந்தராசு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்துமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி வழக்கு பதிவு செய்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிரகாஷ், மாப்பிள்ளையின் அண்ணன் முரளி, அண்ணிவச்சலா,தாய் தயாநிதிஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில்அடைத்தனர்.

    • முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது.
    • கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக தகவல் பரவியது.

    கடலூர்: 

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி முதல், 27-ந்தேதி வரை நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைத்து கனகசபை மீது ஏறும் படிக்கட்டின் கதவுகளை பூட்டினர்.

    இது தொடர்பாக கோவிலில் பணிபுரிந்த முன்னாள் தீட்சிதரின் புகாரின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் கோவிலுக்கு சென்று அறிவிப்பு பலகையை அகற்றினர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள், கனகசபைக்கு ஏறும் படிகட்டுகளின் கதவுகளை உட்புறமாக பூட்டி விட்டனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் முடிந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதியளித்து கதவை திறந்து விட்டனர்.

    இந்நிலையில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், போலீசாரும் விளம்பர பலகையை அகற்றும் போது, கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக டுவிட்டர் எனப்படும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் (38) சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் அடையாளம் தெரியாத நபர், டுவிட்டர் சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பியு ள்ளார். இத்தகவலின் அடிப்படையில் சிதம்பரம் பஸ் நிலையம், கஞ்சி தொட்டி முனை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக பரவலாக பேசி வருகின்றனர். பொதுமக்கள் பேசுவதற்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். அதன்படி சிதம்பரம் நகர போலீசார், டுவிட்டரில் தவறான தகவல் பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சொரத்தூரில் முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக முத்தாண்டி குப்பம் போலீசாருக்குதகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம்போலீசார்அழுகிய நிலையில் கிடந்த பெண்பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

    விசாரணையில்அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததுநெய்வேலிமாற்றுகுடியிருப்பு"ஏ"பிளாக்கை சேர்ந்த குப்புசாமி மனைவிசின்னபொண்ணு(80), என்பது தெரிய வந்தது .இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனது தெரியவந்தது. இவரது மகன்சூடாமணி நேரில் வந்து பார்த்து தாயின் உடலைஅடையாளம் காட்டியுள்ளார். சின்ன பொண்ணு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வயது முதிர்வு காரணமாக மயங்கி விழு ந்து இறந்தாரா என்பது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீரா தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
    • வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மீரா (17), தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவர்,நேற்று காலை10மணிக்கு டியூஷன் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்துபுறப்பட்டுசென்றவர் வீடுதிரும்பவில்லை.பலஇடங்களில்தேடியும் எங்கும் கிடைக்காததால் மீராவின் தந்தை முருகன்பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனவைி பரிமளா (வயது 40), இவர்களது மகன் அருண்ராஜ் (19).

    பழனிவேல் குடும்பத்துடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. வேகமாக லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த பழனிவேல் மகன் அருண்ராஜ் மற்றும் அருண்ராஜின் தாய் பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார் லாரியில் லாவகமாக சிக்கிக்கொண்டது. இதனால் போலீசாரால் விக்கியை காரியிலிருந்து மீட்க முடியவில்லை.

    உடனடியாக புவனகிரி போலீசார் சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் அருண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×