search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private school bus"

    • சாரல் மழை பெய்ததால் அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார்.
    • தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை நெல்லிக்குப்பம் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே கோண்டூர் பகுதி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து பஸ்சில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு அரசு பஸ் சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் தனியார் பள்ளி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றி வருவதற்காக கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையிலிருந்து கடலூரில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். உடனே பஸ்சின் பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் முன்னால் சென்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் வேகவேகமாக கீழ் இறங்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எந்த வித காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை அரசு பஸ் மீது மோதி தனியார் பள்ளி பஸ் உடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.
    • இதில் பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வாய்க்கால்மேடு இச்சிசெட்டிபாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.

    அப்போது தேவம்பா ளையம் என்ற இடத்தில் தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.

    அப்போது லாரியில் இருந்து கற்கள் பள்ளி பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து. இதில் பள்ளி பஸ்சில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    இதனையடுத்து பஸ் மீது மோதிய டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. பஸ் டிரைவர் லாரியை துரத்தினார். அப்பவும் லாரி நிற்காமல் சென்றது.

    இது குறித்து மலையம்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கே உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அரியலூர் அருகே தாய் கண் முன்னே 2½ வயது குழந்தை நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு நவீன், நிதிஷ் (வயது 2½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நவீன் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட அவனை அனுப்பி வைப்பதற்காக அவனது தாய் கலைச்செல்வி வெளியே அழைத்து வந்தார். உடன் நிதிஷூம் வந்துள்ளான்.

    அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனும் அங்கு வந்தது. பள்ளி வேனில் நவீனை ஏற்றி விட்டார். அதே சமயம் நிதிஷ் வேனுக்கு பின்னல் நின்று கொண்டிருந்தான். நவீன் ஏறிய பின்னர் வேனை டிரைவர் பின்னோக்கி இயக்கினார்.

    அப்போது அங்கு நின்ற நிதிஷ் படிக்கட்டின் பக்க வாட்டில் சிக்கி வேனுக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டான். அடுத்த வினாடி வேன் சக்கரம் நிதிஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.

    இதைப்பார்த்த அவனது தாய் கலைச்செல்வி கதறித் துடித்தார். பின்னர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் நக்கம்பாடியை சேர்ந்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் கண் முன்பு குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    ×