என் மலர்tooltip icon

    கடலூர்

    • சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • எங்கு தேடியும் சுகாசினி கிடைக்காததால் இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே அங்காளம்மான் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகள் சுகாசினி (வயது 20). சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சாமிதுரை பாகூரில் தங்கி வேலை பார்த்து மாதம் ஒரு முறை அல்லது நீண்ட நாட்கள் கழித்து மேல்புவனகிரியிலுள்ள தனது வீட்டிற்கு வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    மீண்டும் நேற்று இரவு பாகூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சுகாசினி திடீரென மாயம் ஆனார். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் இவரது தந்தையை பஸ்சில் வேலைக்கு ஏற்றி விட சென்றுள்ளனர் என நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகாசினி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து சுகாசினி தாய் பேபி இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சுகாசினி கிடைக்கவில்லை. இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுகாசினி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
    • நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குடிகாடு பகுதியில் ஒரு வீட்டில் நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். அந்த நாய்க்குட்டியை, பார்ப்பதற்கு ஒரு குரங்கு தினமும் குடிகாடு கிராமத்திற்கு வருகிறது.

    பின்னர் சாலையில் சுற்றித்திரியும் அந்த நாய்க்குட்டியை குரங்கு லாவமாக தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. பின்னர் அந்த நாய்க்குட்டியுடன் குரங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    இது மட்டுமின்றி குரங்கு தனது குட்டி குரங்குகளுக்கு எப்படி பேன் பார்க்குமோ அதேபோல் அந்த குட்டி நாய்க்கும் பேன் பார்ப்பது போல் பாவனை செய்கிறது. மேலும் உயரமான கட்டிடத்தில் நாய்க்குட்டி விளையாடுவது மட்டுமின்றி குரங்குடன் எந்தவித சண்டையும் போடாமல் ஆனந்தமாக இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தமாகவும், வியப்புடனும் பார்த்து வருகின்றனர்.

    தினமும் அந்த வீட்டு பகுதிக்கு வரும் குரங்கு, நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு தனக்கு பிடித்தமான இடத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    பெரும்பாலும் குரங்குகள் மற்ற பிராணிகளுடன் விளையாடுவதை விரும்பாமல் மரங்களை விட்டு மரங்கள் தாவியும் தனக்கான உலகத்தில் யாரையும் அண்டவிடாமல் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில், குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தினமும் தூக்கி சென்று விளையாடி விட்டு மீண்டும் அதே பகுதியில் இறக்கி விட்டு செல்வது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இந்த அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். தங்களது செல்போன்களிலும் படம் பிடித்து கொள்கின்றனர்.

    • சாரல் மழை பெய்ததால் அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார்.
    • தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை நெல்லிக்குப்பம் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே கோண்டூர் பகுதி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து பஸ்சில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு அரசு பஸ் சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் தனியார் பள்ளி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றி வருவதற்காக கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையிலிருந்து கடலூரில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். உடனே பஸ்சின் பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் முன்னால் சென்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் வேகவேகமாக கீழ் இறங்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எந்த வித காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை அரசு பஸ் மீது மோதி தனியார் பள்ளி பஸ் உடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
    • நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தியாகும்.

    கடலூர் :

    வடலூர் நகரில் சமீப காலமாக வாகன போக்கு வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடலூர் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் பெரும்பாலும் மாற்று இடங்களில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த கடைகள் பண்ருட்டி சாலையில் அதிக அளவில் செயல்படுகின்றன. ஓட்டல்கள், டீக்கடைகள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கடைகள் இந்தப் பகுதியில் செயல்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற சூழலில் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக ெரயில்வே கேட் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 2 பேரும், நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தி யாகும். குறிப்பாக ெரயில்வே கேட் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையி லேயே நிறுத்தி விட்டு செல்வது பெரும் இடையூறாக உள்ளது. இதே போல புதிதாக துவக்க ப்பட்ட பல டீக்கடைகள் முன்பு நிறுத்த ப்படும் வாகனங்க ளாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு போலீ சார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    எனவே, வடலூர் 4 முனை சந்திப்பிலிருந்து பண்ருட்டி சாலையில் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகள் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மாற்று இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்வேலி இந்திரா நகர் முதல் மறுவாய் வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. 60 அடி சாலையின் நடுவில் 30 அடி மட்டுமே புது சாலை போடப்பட்டதால் 2 புறமும் பழைய சாலைகள் அப்படியே உள்ளன. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் பிற வாகனங்களுக்கு வழி விடும்போது 2 சாலைகளுக்கும் நடுவே உள்ள உயர வித்தியாசத்தால் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. அப்போது வரும் கனரக வாகனத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலைகளை பழைய நிலையிலையே அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    • கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக வேலூர் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் செம்மேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சுகுமார் (25), அதே ஊரை சேர்ந்த ஐயப்பன் மகன் சரண்ராஜ் (24). இவர்கள் இருவரும் சோலார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் வேலை முடிந்து நள்ளிரவு 12.45 மணி அளவில் சின்ன சேமக்கோட்டை அய்யனார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக வேலூர் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி சுகுமார், சரண்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் செம்மேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் பஸ் நிறுத்தம் இருந்து வருகின்றது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருவதால் ஏராளமான பொதுமக்கள்பஸ் நிறுத்தத்தில் நின்று சென்று வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் பொதுமக்கள் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அரசு அறிவித்த கால கெடுவிற்குள் பணிகளை தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
    • துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படுகிறது. இவைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 3 இடங்களில் தரம் பிரிக்கின்றனர். கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் இவைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால்் ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகி்றது. இதனை நாய், பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இவைகளை அகற்றி அப்பகுதி மக்களின் நலன்காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • பஸ் மோதி விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    வடலூர் எம்.ஆர்.கே பகுதியை சேர்ந்தவர் பால முருகன் மகன் கோகுல் (வயது 23). தெங்குத்து திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜெகதீசன்(25).இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வட லூர்-பண்ருட்டி சாலை யில் சென்று கொண்டி ருந்தனர். அங்குள்ளள தனி யார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளி லிருந்து நிலைதடு மாறி கோகுல், ஜெகதீசன் ஆகியோர் கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த இவர்கள் மீது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இவர்கள் மீது மோதிய அரசு பஸ் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் சாலை ஓரமாக நடந்து சென்ற நபர் உள்பட 3 பேர் மீது மோதி விபத்துக்குள் ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறினர். இந்த விபத்தில் ஆண்டி குப்பம் இளங்கோ நகரை சேர்ந்த குமார் (43), புவன கிரி வள்ளலார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (64), கடலூர் புதுநகரை சேர்ந்த குமார் மகன் மணி கண்டன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அங்கு வந்து பஸ் மோதி விபத்துக்குள்ளா னதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் உள்பட 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரி ழந்த ஜெகதீசனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக குறிஞ்சிப் பாடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது.
    • திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகள் பல்வேறு குளுமையான பொருட்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனை தொடர்ந்து காலையில் கடும் வெயிலும், மாலையில் திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அளவு இருந்து வந்ததால் பொதுமக்கள் மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததோடு குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வந்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், சிதம்பரம் ,லால்பேட்டை, ட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் திடீர் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் கடும் வெயிலும் மற்றொருபுறம் திடீர் மழையும் இருந்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விருத்தாசலம் - 12.0, பரங்கிப்பேட்டை - 11.2 , மீ-மாத்தூர் - 8.0 4. லால்பேட்டை - 6.0 , ஸ்ரீமுஷ்ணம் -5.1 6, காட்டுமன்னார்கோயில் - 4.0 7. ,குப்பநத்தம் - 3.2 , கொத்தவாச்சேரி - 3.0 , பண்ருட்டி - 2.0 , குறிஞ்சிப்பாடி - 2.0 11. அண்ணாமலைநகர் - 2.0 , புவனகிரி - 2.0 , சேத்தியாதோப்பு - 2.0 .. பெல்லாந்துறை - 1.8 , சிதம்பரம் - 1.5 , கலெக்டர் அலுவலகம் - 1.4 , கடலூர் - 1.3 , வடக்குத்து - 1.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

    கடலூர்:

    நடு நாட்டு சிவதலங்களில் 2-வது தலமான காசியை விட வீசம் அதிகம் என போற்றப்படும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் சைவத்தின் முதல் தொண்டர் தம்பிரான் தோழர் நம்பி ஆரூரார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதுகுன்றத்து முழு முதல் பழமலைநாதர் பெருமானிடம் 12000 பொற்காசுகள் பெற்று மணிமுத்தா நதியில் விடும் தொன்மையான பெருவிழா கொடியேற்ற துடன் தொடங்கியது.

    இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 21 திருமஞ்சனம் அலங்கா ரம் மகேஸ்வர பூஜை, முதுகுன்றத்தில் இமையோர் தனி நாயகரிடம் ஏழு இசை இன் தமிழால் பதிகம் பாடி 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பெருமானிடம் பெற்ற செம்பொன்னை மணிமுத்தா நதியில் இட 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மணிமுத்தா நதியில் உள்ள மாற்று உரைத்த விநாயகர் துணையோடு செம்பொ ன்னை மணிமுத்தா நதியில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
    • பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். 

    • டிரான்ஸ்பார்மரை உடைத்து 15 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
    • திருடு போன காப்பர் கம்பி சுமார் 50 ஆயிரம் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பூவாணிக்குப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று மின்சார துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரை உடைத்து 15 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இத்தகவல் அறிந்த மின்சார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருடு போன காப்பர் கம்பி சுமார் 50 ஆயிரம் ஆகும். பின்னர் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஆலப்பாக்கம் மின்சார துறை உதவி பொறியாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×