புவனகிரி அருகே இளம்பெண் மாயம்

சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். எங்கு தேடியும் சுகாசினி கிடைக்காததால் இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.
புவனகிரி அருகே இளம்பெண் மாயம்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே அங்காளம்மான் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகள் சுகாசினி (வயது 20). சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சாமிதுரை பாகூரில் தங்கி வேலை பார்த்து மாதம் ஒரு முறை அல்லது நீண்ட நாட்கள் கழித்து மேல்புவனகிரியிலுள்ள தனது வீட்டிற்கு வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

மீண்டும் நேற்று இரவு பாகூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சுகாசினி திடீரென மாயம் ஆனார். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் இவரது தந்தையை பஸ்சில் வேலைக்கு ஏற்றி விட சென்றுள்ளனர் என நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகாசினி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து சுகாசினி தாய் பேபி இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சுகாசினி கிடைக்கவில்லை. இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுகாசினி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com