என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student disputes"

    • எந்த தனியார் நர்சிங் கல்லூரி சிறந்தது என அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
    • கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 2 தனியார் நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரியில் திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 நர்சிங் கல்லூரிகளிலும் கல்வி கற்கின்றனர். 2 கல்லூரிகளில் எந்த தனியார் நர்சிங் கல்லூரி சிறந்தது என இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனத் தெரிகிறது.இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவிகள் வீட்டிற்கு கிளம்பினர். திட்டக்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 2 நர்சிங் கல்லூரி மாணவிகளும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரே கிராமத்தில் இருந்து வரும் மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இவர்கள் தங்கள் கல்லூரியன் பெருமையை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி இரு கல்லூரி மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாணவிகள் மாறி, மாறி அடித்துக் கொண்டனர். மேலும், பஸ் நிறுத்தத்திலேயே தலை முடியை பிடித்து சண்டை போட்டனர்.  இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர். சில பெண்கள் மட்டும் மாணவிகளை விலக்கி விட்டு சமாதான ப்படுத்தினர். ஆனாலும், மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு தங்கள் கல்லூரியின் பெருமைகளை கூறினர். திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், பெண் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு தலைவிரி கோலத்தில் சண்டையிட்டுக் கொ ண்டிருந்த மாணவிகளை பெண் போலீசார் உதவியுடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்.  

    அங்கு மாணவிகளை அமரவைத்த போலீசார், இது போன்று சாலைகளில் சண்டையிட்டால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவிகளுடன் பெண் போலீசாரை அனுப்பி பஸ் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 நர்சிங் கல்லூரி மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் சண்டையிட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×