search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
    • நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தியாகும்.

    கடலூர் :

    வடலூர் நகரில் சமீப காலமாக வாகன போக்கு வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடலூர் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் பெரும்பாலும் மாற்று இடங்களில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த கடைகள் பண்ருட்டி சாலையில் அதிக அளவில் செயல்படுகின்றன. ஓட்டல்கள், டீக்கடைகள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கடைகள் இந்தப் பகுதியில் செயல்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற சூழலில் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக ெரயில்வே கேட் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 2 பேரும், நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தி யாகும். குறிப்பாக ெரயில்வே கேட் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையி லேயே நிறுத்தி விட்டு செல்வது பெரும் இடையூறாக உள்ளது. இதே போல புதிதாக துவக்க ப்பட்ட பல டீக்கடைகள் முன்பு நிறுத்த ப்படும் வாகனங்க ளாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு போலீ சார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    எனவே, வடலூர் 4 முனை சந்திப்பிலிருந்து பண்ருட்டி சாலையில் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகள் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மாற்று இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்வேலி இந்திரா நகர் முதல் மறுவாய் வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. 60 அடி சாலையின் நடுவில் 30 அடி மட்டுமே புது சாலை போடப்பட்டதால் 2 புறமும் பழைய சாலைகள் அப்படியே உள்ளன. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் பிற வாகனங்களுக்கு வழி விடும்போது 2 சாலைகளுக்கும் நடுவே உள்ள உயர வித்தியாசத்தால் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. அப்போது வரும் கனரக வாகனத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலைகளை பழைய நிலையிலையே அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×