என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

    கோவை:

    தெற்கு ரெயில்வேயில் தற்போது 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற விரைவு ரெயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்தநிலையில் தென்மேற்கு ரெயில்வே சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் இதன் சேவை தொடங்குகிறது.

    இந்த ரெயிலை சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள்படி இந்த 4 ரெயில்களிலும் புதிய வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி புதன்கிழமை தவிர தினந்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயில் (எண் 26651) 5.20 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9 மணிக்கு ஈரோடு, 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூர், 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுமார்க்கமாக புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (எண் 26652) 3.20 மணிக்கு திருச்சூர், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
    • சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இதன்படி ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்தவர்களை தவிர்த்து வெளியூர், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பிரதேசமான வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

    சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி மற்றும் சோலையாறு அணை இடதுகரை மழுக்குப்பாறை வழி சோதனைச்சாவடியிலும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    வால்பாறை வருவதற்கு இ-பாஸ் பெற https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி சோதனைச்சாவடிகளில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் அதே இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து பெற்றுகொண்டால் போதுமானதாகும். அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை. எனவே, வால்பாறை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுதான் வர வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.

    கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜன் முன்னிலையில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஆர் பி முருகேஷ், மாநகராட்சி உறுப்பினர் நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
    • போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    • யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    நிலத்தையொட்டி, வனத்துறை சார்பில் யானைகள் நுழையாமல் இருக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 20 வயது ஆண் காட்டு யானை ஒன்று இந்த அகழியை கடக்க முயன்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக யானை அகழியின் இடுக்கி சிக்கி, அதன் கால்கள் அகழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் யானையால் வெளியே மீண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது. அப்போது தோட்டத்திற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சிக்கிய மின்கம்பிகளுடன் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது.

    இதை பார்த்த திருமலை ராஜ் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அதன் பின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் 5அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • 2 நாட்கள் திருப்பூரில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று கோவை வந்தார். கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் கொடிசியாவில் மக்கள் மன்றம்சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதன்பிறகு, சொந்த ஊரான திருப்பூர் வருகிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் மாலை 5 மணிக்கு திருப்பூர் வருகிறார். அங்கு அவருக்கு அனைத்து அரசியல் கட்சியினர், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

    பின்னர் நாளை (புதன்கிழமை) காலை சந்திராபுரத்தில் உள்ள தனது குலதெய்வமான பாலைமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து முத்தூர் செல்லாண்டியம்மன் கோவில், சின்னமுத்தூர் செல்வகுமாரசாமி கோவில், அத்தாத்தா முத்தாத்தா செல்லாத்தா கோவில், முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பண்ணசாமி கோவில்களில் அவர் சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் அங்கிருந்து திருப்பூர் வரும் அவர், ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார். காலை 11.30 மணிக்கு திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழில் அமைப்பினர், தன்னார்வலர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் 5அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மத்திய பாதுகாப்பு படை குழுவினர், தமிழக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.

    திருப்பூர் குமரன் சிலை, காந்தி சிலை மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு, அவர் செல்ல இருக்கும் கோவில்கள், அவர் தங்கும் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்கள் திருப்பூரில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் அனைத்தும் நேற்றே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்களை போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைக்கிறார்கள்.

    மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ், விடுதி பணியாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

    • சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
    • வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.

    இங்கு பல்வேறு தரப்பட்டு மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள்.

    வடமாநிலத்தவர்களை தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கு இருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால் நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும்.

    அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும். வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?
    • ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?

    கோவை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்  கூறியதாவது:-

    தமிழக அரசு மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களில் அடுக்கி வைத்துள்ளது.

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தெருவில் கொட்டி வைத்துள்ளனர்.

    தமிழக விவசாயிகளின் நெல்லை தெருவில் போட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து வாங்குகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?

    ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க அரசு 4 ஆண்டு காலத்தில் நீர்மேலாண்மை, நீர் பாசனத்திற்கு எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
    • தி.மு.க தமிழ்நாடுக்கு செய்த முதலீடு வெறும் பொய் தான்.

    கோவை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க அரசு விளம்பரத்தை மட்டும் தான் செய்கிறது. வேளாண்துறை அமைச்சர் எந்த பிரச்சனையும் இல்லை. 99 சதவீதம் கொள்முதல் செய்துவிட்டோம் என்கிறார். உணவுத்துறை அமைச்சர் அதற்கு ஒருபடி மேலாக போய் விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவிக்கிறார்.

    விவசாயிகள் எல்லாம் அழுது கொண்டிருக்கின்றனர். கோபமாக இருக்கின்றனர். விவசாயிகளை பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் முதலமைச்சர் இருக்கிறார். தி.மு.க.வினருக்கு மக்கள் பாடத்தை புகட்டுவார்கள்.

    நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க அரசின் மெத்தனத்தால் தற்போது பெய்த மழைக்கே மழைநீரில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல் விட்டு விட்டதால் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெல்லில் 40 சதவீத குறுவை நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதி 60 சதவீதம் கொள்முதல் செய்யப்படவில்லை. தற்போது கொள்முதல் செய்யுமாறு கேட்டால் ஈரப்பதம் என தெரிவித்து வாங்க மறுக்கின்றனர்.

    அரசு கொள்முதல் செய்யாமல் விட்டுவிட்டதால் தான் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. விளைந்த நெல் மட்டுமல்ல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் சேதம் அடைந்துள்ளது.

    தி.மு.க அரசு 4 ஆண்டு காலத்தில் நீர்மேலாண்மை, நீர் பாசனத்திற்கு எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

    தி.மு.க தமிழ்நாடுக்கு செய்த முதலீடு வெறும் பொய் தான். தி.மு.க எத்தனை முதலீடு செய்துள்ளது என்பது தொடர்பாக புத்தகம் தயாரித்துள்ளோம். எனது நடைபயணம் முடிந்ததும் அதனை வெளியிடுவோம். கனிமவள கொள்ளையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும், விபத்தில் நண்பர்களான பிரகாஷ், ஹரிஷ், சபரி, அகத்தியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    4 பேர் உயிரிழந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மின்கம்பியை சாய்த்தபோது அந்த மின்சார கம்பம் யானையின் மீது விழுந்துள்ளது.
    • பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொண்டாமுத்தூர்:

    கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் அருகே உணவு, குடிநீர் தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

    வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பியை சாய்த்தபோது அந்த மின்சார கம்பம் யானையின் மீது விழுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி அந்த யானை உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.
    • கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை.

    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள கோவையில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் நோய்பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் வேலந்தாவளம், வாளையாறு உள்ளிட்ட 12 எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கோவை வழியாக கேரள பன்றி பண்ணைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புததுறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பிலும் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட சில இடங்களில் செயல்பட்டு வரும் பன்றி வளர்ப்பு பண்ணைகளை கண்காணித்து வருகிறோம். தற்போது பரவுவது ஏ.எஸ்.எப் வகை பன்றி காய்ச்சல் ஆகும்.

    எனவே வளர்ப்பு பன்றிகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்கும்படி பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×