என் மலர்
கோயம்புத்தூர்
- எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
- நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன்.
- அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதும் எதிர்த்து பேசுவதே கிடையாது. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள்.
திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சி விடுதலை சிறுத்தைகள். இந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை எனப் பேசுகிறார். நீங்கள் கண்டு பிடித்தீர்களா? டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். ஏன் நோபல் பரிசு கொடுக்கலாம். எங்களுக்கும், எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என சொல்வதற்கு நீங்கள் யார்?.
வந்து பாருங்கள் நாங்கள்தான் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்களுக்குள்தான் கருத்து வேறுபாடு வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன். அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க. எப்படியாவது கூட்டணி ஆட்சி வரக் கூடாதா என உள்மனது சொல்கிறது. ஆனால் வெளியில் இல்ல... இல்ல... இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என அவரே சொல்கிறார். இரண்டு கருத்தையும் அவர்தான் குறிப்பிடுகிறார். உங்களுடைய கூட்டணியில்தான் மிகப்பெரிய குழப்பம் காணப்படுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டார். எங்களுடைய கூட்டணி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் எனக் குறிப்பிட்டார். ஆகவே எங்களுடைய கூட்டணி தெளிப்படுத்தப்பட்டு விட்டது.
எதிர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் கூட்டணி அமைத்தால் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?. பாஜக உடன் கூட்டணி என எங்களுக்கு விருப்பம். தற்போது ஐஜேகே கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. பார்வர்டு பிளாக் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்... வரும்... அதிமுக கூட்டணி கண்டு பயம் வந்துள்ளது. அதிமுக கூட்டணியை பற்றி பேசும்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது.
2026 தேர்தலில் பலமாக கூட்டணி அமைக்கப்பட்டு 234 தொகுதியில் 200 தொகுதிகளில் அதிமுக தலைமையில் கூட்டணி வெல்லும்... வெல்லும்...
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை.
- திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டப்பட்டன. திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தது. 1100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 3ஆவது கூட்டு நீர் திட்டம் அதிமுக-வால் தொடங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. திறந்து வைத்தது திமுக. திமுகவால் திட்டத்தை கொண்டு வர முடியாது.
கூட்டணி பலமாக இருக்கிறது என ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். நீங்கள் கூட்டணியை நம்பி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள்தான் வாக்களித்து ஆட்சியை அமைக்க முடியும். கூட்டணி அல்ல.
திமுக கூட்டணியில் உள்ள குட்டி கட்சிகள்... கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது.
முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்கிறீர்களே, எப்படி என்கிறார்கள். தேர்தல் மூலம்தான் மீட்போம். ஏனென்றால் கொடூமையான, கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முடியாத அரசாங்கம். திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதல்வராக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
ஆகவே, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தமிழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிகொண்டிருக்கிறது. அதில் இருந்து தமிழகத்தை மீட்போம். அதுதான் லட்சியம். ஆகவே முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போன்று எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள்.
எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.
திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இப்படியோ போய்க்கொண்டிருந்தால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.
கோவை:
கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மக்களுடன் உரையாடிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க.
* தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.
* தமிழ்நாட்டில் தூர்வாரப்படாத அணைகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டன என்றார்.
- இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
- மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
அப்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அதிமுக தேர்தல் பரப்புரையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் இந்த ரோடு ஷோவை பார்த்தவுடன் சிலருக்கு ஜூரம் வந்துவிடும்.
மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது.
2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும். 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக கட்சி நல்ல கட்சி, நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா?
மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, எதுவுமே தமிழ் செய்யவில்லை என கீரல் விழுந்த ரெக்கார்டு போல் பேசுகின்றனர்.
16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது?
திமுக மக்களை பற்றி சிந்தித்ததா?, நிதி கொண்டுவந்ததா? இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.
வரும் தேர்தலில் தீயசக்தியான திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
- சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில், தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை பிரச்சார பயணத்திற்கு பிரத்யேக பேருந்தில் இபிஎஸ் புறப்பட்டார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றுள்ளார்.
- நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.
- அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
* நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.
* அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.
* விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை, தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
- சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பேசிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குப்போட்டு செங்கல் சூளையை மூட வைத்ததாக முறையிட்டனர்.
செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் செய்ய முடியாமல், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் முதலமைச்சரானதும் செங்கல் சூளை தொழிலை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
- காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தின.
இதற்கிடையே பருவமழை காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலை மாறியது, இருந்த போதிலும் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டும், சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து அங்குள்ள வீடுகளில் கால்நடைக்கான தீவனங்களை தின்றும் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதன்காரணமாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஊருக்குள் யானைகள் வராமல் தடுத்து நிறுத்த வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டத்திற்கு முன்பு நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு ஒற்றை காட்டு யானை உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் முன்பாக அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூரின் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம். மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
- போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
- சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.






