என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்பதுபோல் திருமாவளவன் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி
    X

    உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்பதுபோல் திருமாவளவன் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி

    • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன்.
    • அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதும் எதிர்த்து பேசுவதே கிடையாது. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள்.

    திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சி விடுதலை சிறுத்தைகள். இந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை எனப் பேசுகிறார். நீங்கள் கண்டு பிடித்தீர்களா? டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். ஏன் நோபல் பரிசு கொடுக்கலாம். எங்களுக்கும், எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என சொல்வதற்கு நீங்கள் யார்?.

    வந்து பாருங்கள் நாங்கள்தான் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்களுக்குள்தான் கருத்து வேறுபாடு வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன். அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைதானே பேசிறீங்க. எப்படியாவது கூட்டணி ஆட்சி வரக் கூடாதா என உள்மனது சொல்கிறது. ஆனால் வெளியில் இல்ல... இல்ல... இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என அவரே சொல்கிறார். இரண்டு கருத்தையும் அவர்தான் குறிப்பிடுகிறார். உங்களுடைய கூட்டணியில்தான் மிகப்பெரிய குழப்பம் காணப்படுகிறது.

    அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டார். எங்களுடைய கூட்டணி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் எனக் குறிப்பிட்டார். ஆகவே எங்களுடைய கூட்டணி தெளிப்படுத்தப்பட்டு விட்டது.

    எதிர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் கூட்டணி அமைத்தால் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?. பாஜக உடன் கூட்டணி என எங்களுக்கு விருப்பம். தற்போது ஐஜேகே கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. பார்வர்டு பிளாக் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்... வரும்... அதிமுக கூட்டணி கண்டு பயம் வந்துள்ளது. அதிமுக கூட்டணியை பற்றி பேசும்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது.

    2026 தேர்தலில் பலமாக கூட்டணி அமைக்கப்பட்டு 234 தொகுதியில் 200 தொகுதிகளில் அதிமுக தலைமையில் கூட்டணி வெல்லும்... வெல்லும்...

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×