என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க இ.பி.எஸ். திடீர் எதிர்ப்பு - கல்வியாளர்கள் கண்டனம்
    X

    அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க இ.பி.எஸ். திடீர் எதிர்ப்பு - கல்வியாளர்கள் கண்டனம்

    • எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
    • நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×