என் மலர்
நீங்கள் தேடியது "அறநிலையத் துறை"
- எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
- நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.
அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டப்படுகிறது
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டும் பணியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே இதற்கான நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் துவக்கி வைத்ததும் உடனடியாக அங்கு பட்டாச்சாரியார் சக்ரவர்த்தி என்பவரை வைத்து இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் பனை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, இந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வாணதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல், இதயவர்மன், பையனூர் சேகர், பட்டிபுலம் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் இருந்து வந்தது.
- வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் - புதுவை சாலையில் வள்ளலார் அருள் மாளிகை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டது. அதுமுதல் இங்கு அன்னதானமும், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் இங்கு ஜோதி வழிபாடும், தைப்பூச தினத்தில் சிறப்பு ஜோதி தரிசனமும் நடைபெறும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் வந்தது. பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் அருள் மாளிகை தொடர்பாக பல்வேறு புகார்கள் இந்து அறநிலையத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்றது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் சிவகரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வள்ளலார் மாளிகையின் பின்பக்கமாக சென்ற அறநிலைய த் துறை ஊழியர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த பிரதான கதவை திறந்தனர். தொடர்ந்து வாயிலில் இருந்த கேட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் கணக்கெடுத்தனர். பின்னர் பரிக்கல் லட்சுமி நரசிம்மன் கோவில் செயல் அலுவலர் வரவழைக்கப்பட்டார். இந்த வள்ளலார் மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
இது குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், தனியார் வசம் இருந்த விழுப்புரம் வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கம் போல அன்னதானமும், வழிபாடுகளும், ஜோதி தரிசனமும் நடைபெறும். இதனால் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். வள்ளலார் அருள் மாளிகையை இந்து அறநிலையத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த சம்பவம் ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அனுப்பூர் செல்லியம்மன் கோயிலில் பழுதடைந்த கட்டுமானப் பகுதியை பழமை மாறாமல் சீரமைப்பது குறித்த அறிக்கையும் அனுமதியும் வழங்குவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து, வாழப்பாடியில் பழுதடைந்துள்ள அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் செல்வவிநாயகர் திருக்கோயில்களை புதுப்பிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும், இக்குழுவினர் இரு கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.






