search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Charities"

    • விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு குறித்து ஓவியங்களாக வரைந்தனர்.
    • சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முரளிதரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் சங்கர், முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், பாஸ்கரன், சோலை, சாமி.செழியன், செயலர் வசந்தகுமார் பட்டேல், கணேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு, முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காமராஜரின் படங்களை ஓவியங்களாக வரைந்தனர்.

    சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் காமராஜரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக, சிறப்பாக பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.

    • இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அனுப்பூர் செல்லியம்மன் கோயிலில் பழுதடைந்த கட்டுமானப் பகுதியை பழமை மாறாமல் சீரமைப்பது குறித்த அறிக்கையும் அனுமதியும் வழங்குவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து, வாழப்பாடியில் பழுதடைந்துள்ள அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் செல்வவிநாயகர் திருக்கோயில்களை புதுப்பிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும், இக்குழுவினர் இரு கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×