என் மலர்
சென்னை
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.
- திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.
பெசன்ட்நகர்:
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்கள் சந்திப்பு என்ற பயணத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தி.மு.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பாக விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.
திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம். இதெல்லாம் விஜய் படித்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு குற்றம்சாட்டுவது நல்லது என்றார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட்ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு, கிருதாலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல்.
செம்பியம்: கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு, வெங்கடேஸ்வரா காலனி 1 முதல் 10வது தெரு, மூலக்கடை, ஆர்.வி.நகர், அன்னை சத்யா நகர், அருள் நகர் மெயின் ரோடு, சீத்தாராம் நகர், எம்.ஆர்.எல். காலனி, காமராஜர் சாலை, சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள், ரிஸ்வான் சாலை, பெரியார் நகர்.
- இப்ப கூட இளையராஜாவின் பழைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
- நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய இளையராஜா, "சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு... என்று கூறிய இளையராஜா ரஜினிகாந்திடம் சொல்லவா சொல்லவா... என்று கூறி மகேந்திரனும் நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம்.
ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு... நாம குடிச்சோம் நியாபமிருக்கா... நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை என்றேன்" என்று இளையராஜா தெரிவித்தார்.
இதைகேட்டு இருக்கையில் இருந்து எழுந்து இளையராஜா அருகில் வந்து பேசிய ரஜினி, "ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல... அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே... 3 மணி நைட் வரைக்கும்... ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு... குறிப்பா கதாநாயகிகளை பத்தி... அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம்... அப்படி இருந்தவரு... இன்னும் நிறைய இருக்கு... அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ரஜினி பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதனையடுத்து பேசிய இளையராஜா, "இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு" என்று கிண்டலடித்தார்.
- நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது
- மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடசென்னையின் பல பகுதியில் கனமழை பெய்தது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
வட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை. மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சுவாரஸ்யமாக, நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
- எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான் என்றார் இளையராஜா.
சென்னை:
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது. இதில் இளையாராஜா பேசியதாவது:
இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான்.
சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதலமைச்சர். எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
நான் முதலாவது நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குதான். எனது குழந்தைகளுக்காக நான் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது.
சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
- இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
- நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.
சென்னை:
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் அதிசய மனிதர்களை இதிகாசங்களிலும், புராணங்களிலும் படித்திருக்கிறேன்.
நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்.
நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு.
இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை.
ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம் என தெரிவித்தார்.
- தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
- சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
சென்னை:
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இளையராஜா கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானவர். அதனால் தான் அவருக்கு நாம் பாராட்டு
விழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இளையராஜாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது சிலையையே நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார்.
- இளையராஜாவின் பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்ல.
- நம் அத்தனை பேருக்கும் காதல் இல்ல.
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபறெ்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாம் எல்லோரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கிற இசைத்தாய் தான் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல் இல்லாம எந்தக் குழந்தைக்கும் தாலாட்டு இல்ல, இளமையில் துள்ளல் இல்ல, யாருக்கும் காதல் இல்ல.
வயல்வெளி, டீக்கடை, திருமணம், ஆட்டோ, பேருந்து இப்படி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் ஒரு இசைஞானி நமது இளையராஜா. இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவர் ஒரு இசை மருத்துவராகவும் இருக்கிறார். இசையமைப்பாளர் என்பதைகாட்டில் இசை மருத்துவராக பெஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிலீஃபர்,
சிறுவயதில் நானும் கோடிக்கணக்கான மக்களை போன்று இசைஞானியின் இசையோடுதான் சேர்ந்து வளர்ந்தேன். எந்தவொரு நேரத்திலும் என்னுடைய பிளேலிஸ்டில் இசைஞானி பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இசைஞானி இளையரஜா என டைட்டில் கார்டு மூலம் பல வெற்றி படங்களை தந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. சுறுசுறுப்பாக, ஒழுக்கமாக, கிரியேட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு அனைவருக்குமான எடுத்துக்காட்டாக இருப்பவர் இளையராஜா.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும்.
- சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
281. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் & 375)
282.ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் & 376)
283.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் களையப்படும். (வாக்குறுதி எண் & 378)
284.தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 379)
285. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 380)
286. காவலர்கள் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 385)
287. காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான தண்டனைகள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வகை செய்யப்படும். (வாக்குறுதி எண் & 386)
288.காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தாமதமின்றி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 387)
289.ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 390)
290. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 391)
291.பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு போன்ற நகரங்களில் ஆட்டோ நகர்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 392)
292.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் புதிய புறநகர்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். (வாக்குறுதி எண் & 393)
293.சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் முறை இரத்து செய்யப்பட்டு, புதிய குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 394)
294.அனைத்து கிராமங்களிலும் காலாவதியான குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்களைப் பதிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 395)
295.சென்னைக்கு குடிநீர் வழங்க நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 396)
296.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 397)
297.வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாத தவணை முறையில் வாங்கப்பட்ட வீடுகளுக்கு விற்பனைத் தொகை முழுவதையும் செலுத்திய பிறகும் விற்பனை பத்திரம் வழங்கப்படாதவர்களின் பிரச்சினையை ஆய்வு செய்து, கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 399)
298.தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும். புதிய சமத்துவபுரங்களும் கட்டப்படும். (வாக்குறுதி எண் & 400)
299.இந்திரா நினைவு வீட்டுவசதித் திட்டம், குடிசை மாற்று வாரிய வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த வீடுகள் சீரமைத்தோ, புதுப்பித்தோ வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 401)
300.பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுமையாக ஆவின் நிறுவனத்திடம் விற்பனை செய்ய வகை செய்யப்படும். பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 403)
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!
இவ்வாறு அவர கூறினார்.
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.






