என் மலர்
செங்கல்பட்டு
- கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.
- எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது.
மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையடுத்து த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான்.
* கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.
* தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்போர் தலைவர்களே இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. நிர்வாகிகள் காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
- மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த 22-ந்தேதி 'விசில் சின்னம்' ஒதுக்கியது. இதனால் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் இன்று காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் காலை 9.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
- செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. இது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர். அவர்கள் அரங்கமே அதிர.. விசில் ஊதி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
- 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது.
- தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.
பாரத் மாதா கீ ஜே எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை பிரமர் வரவேற்று பேசினார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர் மோடி, இளம் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.
பின்னர் மேலும் அவர் கூறியதாவது:-
2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்கு பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
பொங்கல், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பான நாட்கள் உள்ள மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரை வணங்குகிறேன், தமிழ்நாட்டின் நலனிற்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக மனிதர் எம்ஜிஆர். இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கு ஒரு செய்தி சொல்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.
மோசமான திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபடத்துடிக்கிறது, தமிழ்நாடு என்டிஏ கூட்டணியை விரும்புகிறது.
தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் உறுதிப்பாடு.
திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
- ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
என்டிஏ கூட்டணி பொபதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது.
நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான்.
இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
- மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார்.
- பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 21-ந் தேதி இரவே சென்னை வந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அந்த வகையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்தே அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது. அதைத்தொடர்ந்து பியூஸ் கோயல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர், புதிய நீதிக்கட்சித் நிறுவனர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதோடு, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுத்துள்ளார். அதன்படி, கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கேரள மாநில நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.
அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள். பின்னர், பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கைகளை உயர்த்தி தங்கள் ஒற்றுமையை பறைசாற்ற உள்ளனர்.
பிற்பகல் 3.10 மணிக்கு பொதுக்கூட்ட மேடை ஏறும் பிரதமர் மோடி தனது உரையை முடித்துவிட்டு, மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக செங்கல்பட்டு மாவட்டமே 5 அடுக்கு பாதுகாப்புடன் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இங்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா (வயது20) என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
நேற்று அதிக அளவில் உடல்நிலை மோசம் அடைந்ததால் சரண்யா கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவர்களில் 4 பேர் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மற்ற 3 பேரும் தங்களது ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளனர். இறந்து போன மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு காரணமா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
வண்டலூர்:
காணும் பொங்கல் விழா நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் சென்று தயார் செய்து கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.
இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.
பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல 10 கூடுதல் பஸ்கள், பார்வையாளர்களின் வசதிக்காக மின்னணு நுழைவுச்சீட்டு வழங்கும் முறை, பார்வையாளர்கள் கியாஸ்க், வாட்ஸ்அப் இணையதளம் மற்றும் வண்டலூர் பூங்கா மொபைல் செயலி மூலம் நுழைவுச் சீட்டு பெற இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. மேலும், பணமாகவும் டிக்கெட் வாங்க ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது.
பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வர அனுமதி இல்லை. நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பினர். பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 65 வனத்துறை பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி பார்வையாளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி மற்றும் அவர்களுக்கு ஏற்ற நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் கூடுதல் தகவல் பலகைகள் மற்றும் திசை குறிப்பு பலகைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. 4 புதிய கழிப்பறை வளாகங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானை, இந்திய காட்டு மாடு, சதுப்புநில மான், வெளிமான், கடமான், அனுமன் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் அனகோண்டா பாம்புகள் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், பார்வையாளர்களுக்காக 7 டி திரையரங்கு இயக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
- மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் லோகேஷ் (வயது22) நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இதே கல்லூரியில் வந்தவாசியை சேர்ந்த சாஹித் பாரான்(22) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு லோகேசும், சாஹித் பாரானும் மகேந்திரா சிட்டி அடுத்து உள்ள வணிக நிறுனத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
அப்போது பின்னால் திண்டிவனத்தில் இருந்து மாதவரம் நோக்கி வந்த மற்றொரு பஸ் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சுக்கும், மோதிய அரசு பஸ்சுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் லோகேசும், சாஹித் பாரானும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது
- அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை ரெயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "கடந்த 20 ஆம் தேதி தாம்பரத்தில், கடற்கரை நோக்கிச் செல்லும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இது அவரது கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
- கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.






