என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விசில் சத்தத்தில் அதிர்ந்த மாமல்லபுரம்: விஜய் முன்னிலையில் விசில் ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய த.வெ.க நிர்வாகிகள்
    X

    விசில் சத்தத்தில் அதிர்ந்த மாமல்லபுரம்: விஜய் முன்னிலையில் விசில் ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய த.வெ.க நிர்வாகிகள்

    • 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
    • செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

    விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

    38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. இது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர். அவர்கள் அரங்கமே அதிர.. விசில் ஊதி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.

    Next Story
    ×