என் மலர்
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் அருகே சுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர்களுக்கு அனுசியா என்ற மகள் உள்ளார்.
நேற்று மாலை தாய்-மகள் இருவரும் சுப்புராயபுரத்தில் இருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே 2 வாலிபர்கள் பைக்கில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வனஜா அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.
அப்போது வனஜா மற்றும் அவரது மகளை வாலிபர்கள் இருவரும் தாக்கி கீழே தள்ளினர். மேலும் வனஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து வனஜா அரியலூர் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் மேற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி காசாம்பு (37). இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை காசாம்பு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காசாம்பு கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள பள்ளிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த அருள்செல்வி (வயது 21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் அருள்செல்வி குடும்பத்தினர் திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்த பொருட்களை திருப்பி கேட்டுள்ளனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர் நீதி நெப்போலியன் (வயது 57) என்பவர் இருவீட்டாரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் செல்வக்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.
அந்த பொருட்களை நீதி நெப்போலியன் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிநெப்போலியனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அருள் செல்விக்கு நீதி நெப்போலியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீதி நெப்போலியனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை மாவட்ட எஸ்.பி.அபினவ் குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
இதேபோல் அரியலூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மத்து மடத்தியை சேர்ந்த சுந்தர் ராஜன் (41), மேலூரை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை,
வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களிடம் துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார்.
மேலும், அனைத்து துறை சார்ந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
முன்னதாக, ரெங்க சமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதை அவர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு புதிய மணல் குவாரி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கிய திருமானூர் ஒன்றியப்பகுதி மக்கள், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தொடங்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனாலும், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி போலீசார் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம், சாலை மறியல், சுடுகாட்டில் குடியேறுதல், கடையடைப்பு, கையெழுத்து இயக்கம், கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை கீழே போட்டும், கலெக்டரிடம் ஒப்படைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொள்ளிடம் ஆற்றில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே மணல் குவாரியை அமைக்க தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங் கப்பட்ட மணல் குவாரிக்கு ஜூன் 5-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் திருமானூர் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ம.தி.மு.க. வாரணவாசி ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்கள் தனபால், முத்துக்குமரன் உள்பட பலர் கொண்டனர். மேலும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு வரும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனகோபால் (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை தனகோபாலிடம் காட்டி அவரிடமிருந்து ரூ.1000 -த்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தனகோபால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனகோபாலிடம் பணத்தை பறித்து சென்றவர் இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 346 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கினர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

திருமானூர் கொள்ளிட கரையோர கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாய பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் புதிய மணல் குவாரி அமைக்க கொண்டுவரப்பட்டுள்ள பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும். மணல் குவாரி அமைப்பதை தடைசெய்ய வேண்டும் என கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு இயக்கத்தினர் சாலை மறியல், கடையடைப்பு, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் வசிக்கும் திருமானூர், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர், கோமான், குருவாடி, அரண்மனைக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இதுநாள் வரை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட மணல் குவாரி அமைக்கும் பணி நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்ய வில்லை. ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் எதற்காக போராடுகிறார்கள் என தெரியும் என்றனர். மேலும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையா அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலக ரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி, சோழமாதேவி, ஓ.கூத்தூர், மேலப்பழுவூர், தவுத்தாய்குளம் ஆகிய கிராமங்களில் மழை கால நிவாரணம் பெறும் 57 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய மண்பாணை செய்யும் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் சார்பில் 35 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறும் ஆணை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு கருப்புக்கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதைதொடர்ந்து பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் பாலாஜி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், இலந்தைகூடம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதையொட்டி வடக்குவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாந்துறையை சேர்ந்த விக்னேஷ் (வயது 24), தெரணியை சேர்ந்த மணிகண்டன் (21), கோவில் எசனையை சேர்ந்த சின்னதுரை (60), செல்லப்பன்பேட்டையை சேர்ந்த தர்மலிங்கம் (50), க.மேட்டுத்தெருவை சேர்ந்த மணி (25) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் படுகாயமடைந்த சின்னதுரை, செல்லப்பன்தர்மலிங்கம், மணி ஆகிய 3 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம்-வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இலந்தைகூட கிராம மக்கள் செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.
முகாமில் சிறந்த மகளிர் சுய உதவிகுழுவினர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும், கீழப்பழூர் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பேசும்போது, ‘இந்த வேலைவாய்ப்பு முகாமில், 821 பேர் கலந்துகொண்டனர். இதில் 308 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 13 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் தங்களுடைய கல்வி தகுதி மற்றும் திறமைகளுக்கேற்ப பணிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்’ என்று கூறினார்.
முன்னதாக கலெக்டர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறு வனங்களின் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் அரங்குகளையும் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை கண்காட்சியையும் பார்வையிட்டார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட இயக்குனர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) லலிதா வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் நன்றி கூறினார்.
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு நீட் எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு உதவியாக அவர்களது பெற்றோரும், உறவினர்களும் உடன் சென்றனர். இதில் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் மாணவி ஹேமா தனது கம்மலை பயண செலவுக்காக அடகு வைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.
முதலில் திருச்சியில் தேர்வு மையம் இருக்கும் என்று எதிர்பார்த்த ஹேமா எர்ணாக்குளம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். பயண செலவு, தங்கும் இடம் செலவு என ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆகும் என்பதால் தாய் கவிதாவிடம் கூறி அழுதார்.
வேறு வழியில்லாமல் ஹேமா தான் அணிந்திருந்த கம்மலை தாயிடம் கழட்டி கொடுத்து அதை அடகு வைத்து பணம் பெற்று வரும்படி கூறினார். அதன்படி தாய் கவிதா ஹேமாவின் கம்மலை அடகு வைத்து பணம் பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஹேமா தனது தாய் கவிதா உதவியுடன் திருச்சி ஜங்ஷனில் இருந்து எர்ணாக்குளத்திற்கு நீட் தேர்வு எழுத புறப்பட்டு சென்றார். ஹேமா போன்று பல ஏழை கிராமத்து மாணவிகள் திடீரென பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கியும், அடகு வைத்தும் பணத்தை புரட்டியுள்ளனர்.
இந்த தேர்வு மைய குளறுபடியால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹேமா தெரிவித்தார். இப்போது அரசு மாணவிகளுக்கு பண உதவி, ஏராளமானோர் பல்வேறு உதவிகள் அளிக்க முன்வந்தாலும் மாணவ, மாணவிகளை தேர்வு மைய குளறுபடி கடுமையாக பாதித்துள்ளது என மாணவி ஹேமா கூறினார்.
இது தேர்வு முடிவில் பாதிப்பை வெளிப்படுத்தும் என சக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். #NeetExam
அரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்ததாலும், அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என திருமானூர் ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கியது. மணல் எடுக்க 2 பொக்லைன் எந்திரங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தஞ்சை-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சுடுகாட்டில் பந்தல் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சமையல் செய்யும் பணியையும் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கோட்டாட்சியர் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து பணிகள் தொடங்கி விட்டது. இனியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும் இன்று திருமானூரில் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் தடையை மீறியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர். இதனால் திருமானூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
ஆர்.எஸ்.மாத்தூர்:
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு நீட் எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு உதவியாக அவர்களது பெற்றோரும், உறவினர்களும் உடன் சென்றனர். இதில் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் மாணவி ஹேமா தனது கம்மலை பயண செலவுக்காக அடகு வைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.
முதலில் திருச்சியில் தேர்வு மையம் இருக்கும் என்று எதிர்பார்த்த ஹேமா எர்ணாக்குளம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். பயண செலவு, தங்கும் இடம் செலவு என ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆகும் என்பதால் தாய் கவிதாவிடம் கூறி அழுதார்.
வேறு வழியில்லாமல் ஹேமா தான் அணிந்திருந்த கம்மலை தாயிடம் கழட்டி கொடுத்து அதை அடகு வைத்து பணம் பெற்று வரும்படி கூறினார். அதன் படி தாய் கவிதா ஹேமாவின் கம்மலை அடகு வைத்து பணம் பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஹேமா தனது தாய் கவிதா உதவியுடன் திருச்சி ஜங்ஷனில் இருந்து எர்ணாக்குளத்திற்கு நீட் தேர்வு எழுத புறப்பட்டு சென்றார். ஹேமா போன்று பல ஏழை கிராமத்து மாணவிகள் திடீரென பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கியும், அடகு வைத்தும் பணத்தை புரட்டியுள்ளனர்.
இந்த தேர்வு மைய குளறுபடியால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹேமா தெரிவித்தார். இப்போது அரசு மாணவிகளுக்கு பண உதவி, ஏராளமானோர் பல்வேறு உதவிகள் அளிக்க முன்வந்தாலும் மாணவ, மாணவிகளை தேர்வு மைய குளறுபடி கடுமையாக பாதித்துள்ளது என மாணவி ஹேமா கூறினார்.
இது தேர்வு முடிவில் பாதிப்பை வெளிப்படுத்தும் என சக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். #tamilnews #neetexam






