என் மலர்
செய்திகள்

சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் குடியேறி பொதுமக்கள்
அரியலூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்ததாலும், அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என திருமானூர் ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கியது. மணல் எடுக்க 2 பொக்லைன் எந்திரங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தஞ்சை-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சி
இதைத்தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சுடுகாட்டில் பந்தல் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சமையல் செய்யும் பணியையும் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கோட்டாட்சியர் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து பணிகள் தொடங்கி விட்டது. இனியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும் இன்று திருமானூரில் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் தடையை மீறியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர். இதனால் திருமானூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

Next Story