என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்ட பஞ்சாயத்து"

    • கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும்.

    விழுப்புரம்:

    தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் பல்வேறு மாவட்டகளுக்கு நேரடியாக சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் முன்பு அறிவிப்பு பலகை என்ற புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    அதில் போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை. இப்படிக்கு போலீஸ் நிலையம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-

    போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்தது.

    குறிப்பாக சிவில் வழக்கு, மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப நல வழக்குகள், அடிதடி வழக்குகளில் வழக்கு பதிவு செய்வதில் புகார்தாரர்கள், எதிர் தரப்பினர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக புகார் கூறப்பட்டது.

    மேலும் இடைத்தரகர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறி வருவதாகவும் கூறப்பட்டது.

    இது தொடர்பான புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்ற நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்கள் முன்பும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில உள்ள போலீஸ் நிலையங்கள் முன்பு கட்டப் பஞ்சாயத்துக்கு இடமில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றபடி பேச்சு வார்த்தை போன்ற பஞ்சாயத்துக்கள் நடைபெறாது.

    இதனை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த போர்டுகளை போலீஸ் நிலையம் முன் வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஜம்முவில் 79.5 சதவீதமும், காஷ்மீரில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 
     
    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களை வலியுறுத்தி வந்தனர்.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    அதன்படி, ஜம்மு பகுதியில் 79.5 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதற்காக காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காஷ்மீர் பகுதிக்குட்பட்ட 491 வாக்குச்சாவடிகள்,  ஜம்முவில் உள்ள 196 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 687 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றன. பிற்பகல் 2 மணியுடன் இன்றைய வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இன்று பதிவாகும் வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection

    பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    பாட்னா:

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள ஜோகியா மாரன் கிராமத்தை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

    இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.



    பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.



    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    அரியலூரில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பள்ளிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த அருள்செல்வி (வயது 21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் அருள்செல்வி குடும்பத்தினர் திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்த பொருட்களை திருப்பி கேட்டுள்ளனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர் நீதி நெப்போலியன் (வயது 57) என்பவர் இருவீட்டாரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் செல்வக்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

    அந்த பொருட்களை நீதி நெப்போலியன் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிநெப்போலியனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அருள் செல்விக்கு நீதி நெப்போலியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீதி நெப்போலியனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை மாவட்ட எஸ்.பி.அபினவ் குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். 

    இதேபோல் அரியலூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மத்து மடத்தியை சேர்ந்த சுந்தர் ராஜன் (41), மேலூரை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×