என் மலர்
உத்தரப் பிரதேசம்
- மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
- வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.
உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.
அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சென்டர் மீடியனில் மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
லக்னோ:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது அவரது நடைபயணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது.
இன்று (திங்கட்கிழமை) காலை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் ராகுல் நடைபயணம் சென்றார். அப்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. அந்த பணம் பணக்காரர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது" என்று பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். உத்தரபிரதேசத்தில் 22-ந் தேதி முதல் 26-ந்தேதி அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
தற்போது உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் 21-ந்தேதியுடன் ராகுல் நடைபயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
- சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
- சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.
மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.
இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.
பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.
- விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.
- ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
கான்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சிக்கந்திரா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
பலியான 6 பேரும், தேராபூர், சிவராஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்த விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.
- உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது.
- டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தற்போதைய எம்.பி.க்கள் யாரையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறக்காது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன். உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பா.ஜனதா மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காது. ஆனால் ஒருவரை தவிர்த்து. அவர் தனது தொகுதியை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜனதா கூட்டணியை PDA (Pichchde, Dalit, Alpsankhyak- பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்) வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிடிஏ என்பது ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுத்தப்பட்ட 90 சதவீத மக்கள் பற்றியது.
டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை. விவசாயிகளை யாராவது ஒருவர் துன்பத்தில் ஆழ்த்தியிருந்தால், அது பா.ஜனதாதான்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான இந்தியா கூட்டணி களம் இறங்குகிறது. அகிலேஷ் யாதவ் கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 11 இடங்களில் போட்டியிடுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
வாரணாசி:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் இங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்திய தொல்லியல்துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில் மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்குள் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஞானவாபியில் நேற்று நள்ளிரவு பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஞானவாபி வளாக கணக்கெடுப்பின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. மேலும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதையொட்டி அப்பகுதியில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
- 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர்.
- 2022-ம் ஆண்டு வீடியோ மூலம் ஆய்வு செய்யப்பட்டபோது, அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக் கடவுளின் சிலை இருப்பதாகவும், அதனால் தங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து மதத்தைச் சேர்ந்த சில பெண்கள் நீதிமன்றத்தை நாடினர். அப்போது நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியாக ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு உடன் மசூதியில் தொல்லியல்துறை அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்டு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் மசூதிக்குள் கடவுள் சிலை இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பான வழக்கு இன்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
மேலும், காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்து பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்து தரப்பு வழக்கறிஞர் சுதிர் திரிபாதி கூறுகையில் "வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களில் எந்த நாட்களிலும் வழிபாடு தொடங்கப்படலாம்" என்றார்.
இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் "நாங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்" என்றார்.
மற்றொரு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி "இன்று பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் தீர்ப்பை ஒருவாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது" என்றார்.

முன்னதாக,
கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.
- டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
- மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.
அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.
அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.
அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.
- 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
- அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டி.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை, சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற்றது.
- ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.
இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்
இதற்கிடையே, மத்தியில் உள்ள பா.ஜ.கவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22-ந் தேதி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
மறுநாள் 23-ந்தேதி முதல் பாலராமரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பால ராமரை தரிசிக்க அயோத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் திரண்டனர். 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.
இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இன்று காலை அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடிகிறது.
இன்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்கள் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை பணத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.






