என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர்.
    • தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது. பா.ஜனதாவும் களத்தில் உள்ளது.

    ஓவைசி காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி, ஓவைசி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா, பி.ஆர்.எஸ்., ஏஐஎம்ஐஎம் மூன்றும் கூட்டு என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் "பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. அதுவும் பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    ஆனால், தெலுங்கானாவில் 119 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஏன் 9 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது. மூன்று கட்சிகளுக்கும் இடையில் சிறந்த கூட்டு உள்ளது. நீங்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ்-க்காக வாக்களித்ததாகும். ஓவைசி கட்சிக்கு வாக்களித்தால் அது பிஆர்எஸ்-க்கு வாக்களித்ததாக அர்த்தமாகும்.

    பிரதமர் மோடி பிஆர்எஸ் அரசின் பாசனத் திட்டம் மற்றும் மதுபான மோசடி குறித்து பேச மறுக்கிறார். ஆனால், ஏஜென்சிகளை காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு விசாரணைக்காக அனுப்புகிறார்" என்றார்.

    • ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள்.
    • இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று குஷ்பு கூறினார்.

    ஐதராபாத்:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழில் கொடிகட்டி பறந்தது போல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. எனவே தெலுங்கு மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். எனவே அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவரை பார்ப்பதற்காகவும் அவரோடு செல்பி எடுப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். தெருக்களில் நடந்து சென்று வாக்கு கேட்ட குஷ்பு, தன்னை பார்க்க திரண்டு நின்றவர்கள் அருகில் சென்று இளம்பெண்களாக இருந்தால் ரா ரா (வா... வா) கண்ணா என்று அவர்களது கண்ணங்களை தடவியும், வயதானவர்களாக இருந்தால் அவர்களை அம்மா என்று கும்பிட்டும் உங்கள் குஷ்பு வந்திருக்கேன். தாமரை பூவை மறந்திடாதீங்க என்று கேட்டு வாக்கு சேகரித்தார்.

    ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள். இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்.

    இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டேன் என்பது தெரிந்த உண்மை. இலங்கையில் நடைபெற இருந்த ஹரிஹரன் கச்சேரியில் இருந்து நான் விலகிவிட்டேன், ஏனெனில் அந்த நேரத்தில் எனது மாமியார் ஒரு பெரிய இதய அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளார். எனது முன்னுரிமை அவர்தான். அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

    அதனால் நான் பின்வாங்கிவிட்டேன் என்று நினைப்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லுங்கள். தெரியாதவர்கள், பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள், அந்நியர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது என் பெயர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தாய் கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.
    • சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல் நதீம் (வயது 23). எலக்ட்ரீசியன். இவரது நண்பரான பைக் மெக்கானிக் நஜ்ருதீன் ( 20).

    இருவரும் சேர்ந்து கடந்த 14-ந்தேதி 15 வயது சிறுமியை கடத்திக்கொண்டு நார்சிங்கியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கிருந்த லாட்ஜ் மேலாளர் ஜான் சிங்கிடம் தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டனர்.

    அதற்கு மேலாளர் அறை தர முடியாது என கூறினார். இதனைக் கண்ட லாட்ஜ் உரிமையாளர் விஜய் பணத்திற்கு ஆசைப்பட்டு கொண்டு அறை ஒதுக்க வேண்டும் என மேலாளருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்களுக்கு அறை வழங்கப்பட்டது. அப்துல் நதீம் மற்றும் அவரது நண்பர் நஜ்ருதீன் இருவரும் சிறுமியை இரவு முழுவதும் அறையில் வைத்து பலாத்காரம் செய்தனர்.

    இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் இது குறித்து கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் அப்துல் நதீம் நேற்று காலை சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனைக் கண்ட அவரது தந்தை மகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தந்தையிடம் தெரிவித்தார்.

    இது குறித்து சிறுமியின் தந்தை கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் நதீம், மற்றும் நஜ்ருதீன் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் விஜய் மற்றும் மேலாளர் ஜான்சிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று கவிதா பதிவிட்டுள்ளார்.
    • காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா தன்னுடைய தந்தையை கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கவிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்- மந்திரி கே.சி.ஆர்.ஐ. போல் விராட் கோலி தோற்கடிக்க முடியாதவர்.

    மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் கட்சி செய்துள்ள பதிவில், நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு போட்டியில்லை. காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பூத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் மந்திரியும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

    பிரதமர் மோடிக்கு 100 கடிதங்கள் எழுதியும் அவர்கள் எங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தரவில்லை.

    பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வீண். காங்கிரசுக்கு வாக்களிப்பது அதைவிட பெரிய வீண் என தெரிவித்தார்.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராக விஜயசாந்தி பணியாற்றினார்.
    • தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று விலகினார்.

    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார். தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த் மற்றும் மற்றொரு தலைவர் எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர்.

    இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.

    தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமான விஜயசாந்தி, 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.

    தெலுங்கானாவுக்கு தனி மாநிலம் கோரி போராடுவதற்காக, 2005-ல் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெலுங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் அவர் சந்திரசேகர ராவ் கட்சியில் இணைந்து 2009-ல் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    ஆகஸ்ட் 2013-ல், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, டி.ஆர்.எஸ். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விஜயசாந்தியை இடைநீக்கம் செய்தது.

    பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர், 2014 தேர்தலில் மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2020-ல் பா.ஜ.க.வுக்குத் திரும்பினார். தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.

    விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    • 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 30-ந்தேதி வாக்குப்பதிவு.
    • சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

    சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

    காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

    • விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

    விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே அங்கு போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரவந்தி நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இன்று இணைந்தார். செயல் தலைவர் கே.டி.ராமாராவ் முன்னிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார்.

    காங்கிரஸ் கட்சி ஒருவரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.

    இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியில் இருந்து விலகியது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    ×