என் மலர்
இந்தியா

ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு
- விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story






