என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என வெளிப்படையாக சொல்லி விமர்சித்து வரும் விஜய், ஒரு கட்டத்தில் பாசிசம், பாயாசம் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் கூறியிருப்பதாவது, தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துத்துகிறேன் என்று தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
- அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.
- 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.
அமைச்சர் பெருமக்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.
மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி வணங்கினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 80-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் குறைந்தது. முந்தைய நாளை காட்டிலும் கிராமுக்கு ரூ.50 சரிந்து ரூ.7 ஆயிரத்து 960-க்கும், சவரனுக்கு ரூ.400 சரிந்து ரூ.63 ஆயிரத்து 680-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,940-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-02-2025- ஒரு கிராம் ரூ.105
27-02-2025- ஒரு கிராம் ரூ.106
26-02-2025- ஒரு கிராம் ரூ.106
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- தென்னகத்தின் உரிமைக்குரலாய், தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய், தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
- திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர், எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உடன் இருந்தனர்.
இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.
- இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.
மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு தக்க பலன் கிடைத்தும் உள்ளது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
- பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற பட்டியலின கல்லூரி மாணவர் புல்லட் ஒட்டியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் கை துண்டிக்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் புல்லட் ஓட்டியதால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று புல்லட் பேரணி நடை பெற்றது.
கோர்ட்டு அனுமதி பெற்று தொடங்கிய இந்த பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெண்கள் உள்ளிட்ட 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.
- திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
`இளைஞர் அணிதான் என் தாய்வீடு' என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.
மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்கள் உள்ளன.
- மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையவும் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மண்டலங்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






