என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
- கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது.
அதன்பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் விலை மளமளவென சரிந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோடு, அதைவிட அசுர வேகத்தில் விலை அதிகரித்தது.
இதற்கிடையே தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது.
இவ்வாறு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.
இந்த விலை உயர்வு குறைந்தபாடில்லை. கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, 'கிடுகிடு'வென உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.
கடந்த 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 840-க் கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த சூழலில், கடந்த 28-ந்தேதி தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 720-க் கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, அதாவது கடந்த 29-ந்தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 360-க்கும், சவரன் ரூ.66 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையானது.
இதனை தொடர்ந்து, தங்கம் விலை மீண்டும் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.65-ம், சவரன் ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 425-க்கும், சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையானது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720
27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-03-2025- ஒரு கிராம் ரூ.113
30-03-2025- ஒரு கிராம் ரூ.113
29-03-2025- ஒரு கிராம் ரூ.113
28-03-2025- ஒரு கிராம் ரூ.114
27-03-2025- ஒரு கிராம் ரூ.111
- கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது.
இதில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை இருந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் பயணிகள் மாற்று விமான நிறுவனங்களின் மூலம் சேவைகளை வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த வாரம் தினசரி ஒரு சேவையை தொடங்கியது. இதில் கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விமானம் இயக்க முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சேவையானது இன்று காலை திருச்சியில் இருந்து பெங்களூருக்கு 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7:45 மணிக்கு பதிலாக முன்னதாகவே காலை 7.10 மணிக்கு சென்றது. மீண்டும் இந்த விமானம் பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.
- அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அதன் காரணமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளார்.
நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால் அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை.
அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா... இவ்வளவு இடம் இருக்கே... இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த செயல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார்.
மதுரை:
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 40). இவர் மதுரை மாநகர தி.மு.க பிரமுகரும், முன்னாள் மண்டல தலைவருமான வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். காளீஸ்வரன் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரில் 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே சென்ற போது காளீஸ்வரனை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), மதுரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் நவீன்குமார் (22), ஜெயக்கொடி (65), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 18 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பாலகிருஷ்ணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வி.கே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் இரு தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் 3 நாட்களுக்கு முன்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 கிலோ கஞ்சாவுடன் நின்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர்தான், கஞ்சா விற்பனை செய்ய சொன்னதாக தகவல் தெரியவந்தது. மேலும் அவர் காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
அவரை தனிப்படை போலீசார் தேடிய நிலையில் விளாச்சேரி பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார். போலீசாரும் அவரை காரில் விரட்டிச் சென்றனர். மேலும் அந்த பகுதிகளில் இருந்த சோதனைச்சாவடிகளில் இருந்த போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஒரு சோதனைச்சாவடியில் சுபாஷ் சந்திரபோசின் காரை போலீசார் மடக்கியபோது அவர்களிடம் இருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து ரிங்ரோடு கல்லம்பல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அவரது காரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்து தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சரண் அடையுமாறு கூறினர்.
ஆனால் அவர் தன்னிடமிருந்த பெரிய கத்தியை எடுத்து போலீசாரை தாக்கினார். அதில் போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது துப்பாக்கியை காட்டி சுபாஷ் சந்திர போசை சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார். அதில் அந்த குண்டு கார் மீது பட்டது.
எனவே தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் திருப்பிச் சுட்டபோது மார்பில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுரையில் வி.கே.குருசாமி, வெள்ளை காளி தரப்பினரிடையே நடைபெற்று வரும் 22 ஆண்டு கால பகை காரணமாக 21 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் வெள்ளைக்காளி தரப்பில் 3 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையர் கூறுகையில்,
ரவுடி சுபாஷ் சந்திர போஸ், போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதால், தற்காப்புக்காக என்கவுண்ட்டர் நடந்தது. காலில் சுட முயன்றபோது, குனிந்ததால் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்தார்.
- கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.43.50 காசுகள் குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ரூ.1,965-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
- அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
சென்னை:
சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதன்மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும்.
ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இந்த பதிவு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.
தற்போது கிராமப்புறங்களில் கூட நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வெறும் ரூ.10 லட்சத்துக்கு சொத்துகள் வாங்க முடியாது.
எனவே, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிரும் இந்த சலுகையை பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.
தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தான செட்டில்மென்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும்.
அதிக மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளிக்கும்போது மகளிருக்கு சலுகை அளிப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்து இருப்பது சரியானது அல்ல.
உச்சவரம்பை நீக்கி விட்டு எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் என்றாலும் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் கட்டணம் அளிக்கும்போதுதான் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிளாமர் காளி என்பவர் கடந்த 22ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
- வழக்கில் ஏற்கெனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடந்து வருகிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருந்தது. போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், என்கவுண்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இந்நிலையில் மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22-ல் கிளாமர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். கொலை தொடர்பாக இரு தனிப்படைகளை அமைத்து ஆண்டின்பட்டி காவல் துறையினர் தேடி வந்தனர். வழக்கில் ஏற்கெனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தது.
கொல்லப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை போலீசாரை தாக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
- அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க திட்டம்.
சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் தொழிலாளர்கள் அதிக பயனடைவர்.
- கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.
- ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுத்துவதாலேயே தமிழகம் கூடுதல் நிதி பெறுகிறது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.
கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. அண்ணாமலை கூறிய 60:40 என்பது தவறான தகவல்.
ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம் எனத் தெரிவித்துள்ளார்.
- நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
- இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.
கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.






