என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
- வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.
இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும் என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான MGR முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஏன் அப்படி இல்லை" என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார், "மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்... நடிகராக இருந்துகொண்டே உதவி பண்ணலாம். காரணம் இது என்னுடைய பணம்... யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால் கரூர் கூட்டநெரிசலில் 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
- விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
- கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.
குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.
விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.
இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
- சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.
சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
- ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி,
சேலம்:
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவா கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரி கரை, கே,பி.கரடு வடபுறம்,
மூலப் பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்ட முத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர்,
மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியா கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம் பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை,
கந்தா்வகோட்டை:
கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிபட்டி,
புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி. பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்வாரிய உதவிச் செயற் பொறியாளா் கே. ராஜ்குமாா் தெரிவித்து உள்ளாா்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
- பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி,
நத்தம்:
நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (22-ம் தேதி) நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி,
கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.
- ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ராமேசுவரம்:
வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
25-ந்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
26 மற்றும் 27ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21-12-2025 மற்றும் 22-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
- அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கடந்த 16-ந்தேதி தமிழகத்தில்; இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது கடந்த 18-ந்தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.
பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
எனவே, அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.






