என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை.
    • பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுரை.

    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே

    கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், " காவல் துறையினர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க தீவிரம்.
    • பா.ஜ.க கூட்டணியில் ச.ம.க., இடம்பெறும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் முடிவு.

    பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் இன்று ச.ம.க தலைவர் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    பா.ஜ.க கூட்டணியில் ச.ம.க., இடம்பெறும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது.

    ஜெயலலிதா காலத்தில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.
    • வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டம்.

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    மேலும், வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க. மாநில முதல் மந்திரிகளுக்கும் ஏற்படும்.

    மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.

    மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார். இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

    முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை.

    மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதல் மந்திரியை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது.

    கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.

    • 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
    • அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசு வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார். இதன்படி 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் நடைபயணத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நடை பயணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வோம். இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசாரின் கருத்துக்களை கேட்டுள்ளோம். அதன் பிறகே நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் 11-ந் தேதி மாலையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு மடிப்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. இவற்றில் ஏதா வது ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    அண்ணாமலையின் நடைபயணத்தை காலையில் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தை மாலையில் நடத்த முடிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்து உள்ளது.

    இந்த குழுவில் நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கடிதம் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • கோவிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோவிலில் ரூ.73.76 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தொன்மையான கோவில்களை புனரமைத்தல், கோவில் சொத்துக்களை பாதுகாத்தல், நிர்வாக பயன்பாட்டிற்கான அலுவலகங்களை ஏற்படுத்துதல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோவிலில் ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டும், கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து கண்டறியப்பட்டு அதனை பாதுகாத்திடும் வகையில் ரூ.73.76 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நில மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு இதுவரை ரூ.5,594 கோடி மதிப்பிலான 6,180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    கபாலீஸ்வரர் கோவில் முன்புறம் நேற்றைய முன்தினம் இரவு தனிநபர் ஒருவர் காகித துண்டுகளை தீயிட்டு எரித்த காட்சியானது கோவில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் கோவில் வெளியில் நடந்திருந்தாலும் கோவிலின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே போல திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் அம்மனின் நகையை உதவி அர்ச்சகர் திருடி, அதை அடகு கடையில் அடமானம் வைத்திருந்தார். அந்த நகையை கோவில் நிர்வாகம் மீட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியானது சட்டத்தின்படி நடக்கின்ற ஆட்சி என்பதால் தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார்.
    • இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை.
    • மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தல்.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    முன்னதாக, பள்ளிகளுக்கு அனுப்பிய மிரட்டல் இமெயிலில், 2 பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க

    உள்ளதாகவும், உடனடியாக குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள். இது காமெடியல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை ஆணையருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசினார்.

    அப்போது மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த கட்டுமானப் பணி கள் 97 சதவீதம் முடிவடைந்துவிட்டது. கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து அண்ணா நினைவிடமும் புதுப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும்.

    மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

    ஓரிரு மாதங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.
    • கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது.

    நெல்லை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

    அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.

    பின்னர் மாலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அதன்பின்னர் நெல்லை சந்திப்பு பகுதியில் தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.

    தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது. இதற்காக அவர் இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். இதனால் கங்கணாங்குளத்தில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே தலை சுற்றல் காரணமாக ஓய்வெடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவர் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்படுவதாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறுகையில்,

    பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே ஒரு நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாக அந்த நபர் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×