என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
    • எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.

    அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    • அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    எடப்பாடி:

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக இன்று அதிகாலை தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை 7.10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலிருந்து அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரன் ஆதித், சகோதரர் கோவிந்தன் உள்பட குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து சென்ற அவர் அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


    வாக்குப்பதிவிற்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    • 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும்.
    • என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    தேனி:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    கே: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

    நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்திய தேசத்தினுடைய தலைவிதியை யார் நிர்ணயிக்கின்ற தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே: உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

    • நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன்.
    • நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான்.

    சென்னை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கே: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களிப்பதற்காக எஸ்ஐஇடி மகளிர் கல்லூரிக்கு வருகை தந்தார்.

    பின்னர், வரிசையில் காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் வாக்குச்சாவடிக்குள் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.
    • பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள்.

    கரூர்:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களித்த பின் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள் GPay மூலம் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.

    திமுக-வை பொறுத்தவரை பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கோவையில் பாஜக கட்சியில் இருந்து யாருக்கேனும் பணம் கொடுத்துள்ளதாக சொன்னார்கள் என்றால் அந்த நிமிடம் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

    இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன்.

    பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த தேர்தலை முழு நேர்மையாக வெளிப்படையாக அறம் சார்ந்து நடத்தி இருக்கிறோம்.

    ஆனால் அதற்கு கோவை மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். கரூரிலும் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை முதல் நபராக வந்து செலுத்தினார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    • இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்தார்.

    பிதறகு தனது வாக்கினை முதல் நபராக செலுத்தினார்.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    அந்த வகையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி வாக்களித்தார்.

    தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் காலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    சிவகங்கை தொகுதியில் உள்ள கண்டனூர் வாக்குச்சாடியில் முன்னால் அமைச்சர் ப. சிதம்பரம் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.

    திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார்.

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரேமலதா மற்றும் விருதுநகர் தேமுதிக தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகரன் வாக்களித்தனர்.

    • நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.

    வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

    அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-

    1. ஆதார் அட்டை

    2. பான் அட்டை

    3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

    4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.

    5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.

    6. ஓட்டுனர் உரிமம்.

    7. பாஸ்போர்ட்

    8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.

    9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.

    10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.

    • தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8-11 மணி வரையும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.
    • ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.

    சென்னை:

    பிரபலமான சொகுசு கார்களில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரும் ஒன்று.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்க உள்ளது.

    ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×