என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
    • திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.

    இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.
    • பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

    செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

    வாகனத்தை நிறுத்தியபோது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார்.

    உடனடியாக பாதுகாவலராக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.

    வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

    உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.

    காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    M3 புழல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க கலைஞர் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • 2026-க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டு வதை இலக்காகக் கொண்டு உள்ள திட்டம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஓய்வின்றி உழைத்து வருகிறார். அதற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்.

    தமிழகத்தில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருகின்றன.

    பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகள் சென்றுள்ளனர்.

    திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க கலைஞர் 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

     

    15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனால், மகளிர் சமுதாயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வியில் சேரும் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகை, 2.73 லட்சம் மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது.

    இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க, தமிழ்நாட்டில் மட்டும் 52 சதவீதம் என உயர்ந்து மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

    இதேபோல மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட் டத்தை அரசு செயல்படுத்தும் என்றும், இரண்டு ஆண்டு களில் 10,000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, கிராமங்கள் வளமடைகின்றன. கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர்.

    இதே போல்"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.

    2.136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர்.

    இது ஆதிதிராவிட இளைஞர்கள் மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு புரட்சித் திட்டமாகும்.

    "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளைக் குறைத்திடும் வகையிலும், அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் "முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை" தமிழ்நாடு அரசே ஏற்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப் பெறுகின்றன திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    2026-க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டு வதை இலக்காகக் கொண்டு உள்ள திட்டம். இரண்டாண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் இத்திட்டத்தின்மூலம் பயன்பெற்றுள்ளனர். பலர் ஒன்றிய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு பணி புரியும் மகளிர் விடுதி நிறுவனம் புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள விடுதிகளை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்திட உத்தரவிட்டார்கள். முதற் கட்டமாக, திருச்சி, கூடு வாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

    இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.

    சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

    மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு 2023 மார்ச் முதல் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" மூலம் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்க ளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

    2021-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஆக உயர்ந்துள்ளது. மகளிர் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்தமிழக கடலோரம், தென்மேற்கு வங்கக்கடலில் 18-ந்தேதி வரை 55 கி.மீ., காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை.
    • ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

        பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

    இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் வாயிலாக, சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

    திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.

    அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்

    • திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
    • கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

    கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

    இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
    • காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக் கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?

    கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?

    யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

    சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கை கள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

    இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக் கிணங்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      சென்னை:

      பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3,949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

      மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு வலிந்து சலுகை காட்டும் நோக்கத்துடன் தான் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழாவை வேறு சில நிகழ்ச்சிகளுடன் இணைத்து ஐம்பெரும் விழாவாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு நடத்தியது. அதில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

      ஆனால், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர்கள், பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி முதலாளிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல. தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டுவது எளிதான ஒன்று தான். தனியார் பள்ளிகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிப்பதன் பின்னணியில் ஏதோ உள்ளது. அது என்னவென்று தி.மு.க. அரசை அறிந்தவர்களுக்கு நன்றாக புரியும். தனியார் பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா நடத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதற்கு தனியார் பள்ளிகள் தகுதியானவையும் இல்லை.

      இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் தனியார் பள்ளிகளில் பயிலும் அவலம் நிலவுகிறது. மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். இது அரசின் பெரும் தோல்வி ஆகும். இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது அரசின் தோல்விக்கு விழா எடுப்பதற்கு ஒப்பானதாகும். அந்த தவறை தமிழக அரசு செய்யக்கூடாது.

      இத்தகைய விழாக்களை நடத்துவதை விட்டுவிட்டு அதற்காக செய்யப்படும் செலவில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 4-ந்தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதுடன், அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
      • கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

      சென்னை:

      சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

      இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

      மேலும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

      இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

      அவரது வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு பைக் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது. அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார். பின்னர் இன்னொரு பைக்கில் மற்றொருவர் வருகிறார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வருகிறார்.

      அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரமித்தனர். ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்கள் அவரை தாக்கியதை பார்த்து பின்னோக்கி சென்றனர். ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது சொமேட்டோ டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த ஆரமித்தார். உடனே அவர் பின்னோக்கி ஓடினார்.

      வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்க இன்னும் 3 பேர் சுற்றி இருந்த தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
      • தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது.

      சென்னை:

      அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

      தி.மு.க. அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் எவ்வித அக்கறையும் காட்டாமல், வெற்றுத் தம்பட்டம் அடித்து வருவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறது.

      அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதிகளில், பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      அ.தி.மு.க. ஆட்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

      மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைத்து சிட்லபாக்கம்-மாடம்பாக்கம் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கிணறுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி, குடிநீரின் தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

      சிட்லபாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களின் நிலைமை படுமோசமாக உள்ளதோடு, ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. குப்பை சேகரிப்பு என்பதே இல்லாததால் மக்கள் பலவித வியாதிகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

      சிட்லபாக்கம் ஜெயேந்திரர் தெருவில் அரசுக்கு சொந்தமான பெரிய கிணற்றில் இருந்து கோடை காலத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு பாழடைந்து வருகிறது.

      தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசையும், மாநகராட்சியையும் கண்டித்தும்; பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், 'சிட்லபாக்கம் முதல் மற்றும் இரண்டாம் பிரதான சாலை சந்திப்பில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

      செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், தலைமையில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
      • ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

      தருமபுரி:

      தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

      இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

      இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதே அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

      கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

      இந்த நீரானது ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காகவே விசாரணை கைதி திருவேங்கடம் கொலை.
      • காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?

      சென்னை:

      நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை- மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

      காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?

      இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத் தான் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பாற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகி உள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

      உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

      ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு தி.மு.க. நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டு உள்ள இத்துப்பாக்கிச் சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக தி.மு.க. அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

      ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

      உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      ×