என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.
- எல்லாருக்கும் ரஜினி சார் படத்துல ஒரு ஸ்டைல் மற்றும் சீன் பிடிக்கும்.
- எனக்கு படையப்பா ஊஞ்சல் சீன் தான் ரொம்ப பிடிக்கும் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஞானவேல் பேசியதாவது:
ஜெய்பீம் பட வாய்ப்பு கொடுத்த சூர்யா சாருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நான் இப்போது நின்றுகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் சூர்யாதான்.
எல்லாருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல் மற்றும் காட்சி பிடிக்கும் எனக்கு படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதினேன்
தலைவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தன்.
அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் செட்டில் இருக்கிறாரோ, நான் அதற்கு முன்பாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கொடுத்த முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதை செய்யவே முடியவில்லை. காரணம் அமிதாப் பச்சன் கேரவனுக்கு செல்லவே மாட்டார். எப்போதுமே ரஜினி வருவதற்கு முன்பே அவர் செட்டுக்கு வர விரும்புவார். இரு சூப்பர் ஸ்டார்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது.
ரஜினி சார் எனக்கு கிடைச்ச கோல்டன் விசா என தெரிவித்தார்.
- சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.
- அமிதாப் டப்பிங் எல்லாம் செய்து படிப்படியாக கடின உழைப்பால் மிக பெரிய ஸ்டாராக உயர்ந்தார் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது... படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு கிட்ட சொன்னேன்..
சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.
இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் என தெரிவித்தார்.
- வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது.
- வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை:
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அனிருத், வக்கீல் சார்... ஆண்டவன் கோர்ட்ன்ணு ஒன்னு இருக்கு.. அங்க இந்த அண்ணாமலை ஜெயிப்பான்.. இது அந்த திருவண்ணாமலை சிவன் மேல சத்தியம் என பஞ்ச் டயலாக் பேசி அசத்தினார்.
மேலும், நான் தலைவருடன் 4 படம் ஒர்க் பன்னிருக்கேன். இது என்னுடைய 34-வது படம். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்லை. தலைவர் இந்த மாதிரி படம் பண்ணினது சினிமாவுக்கு ரொம்ப நல்லது.
நிறைய படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கலந்துருக்கேன். ஆனா, எந்தப் படத்துக்கும் ரஜினி சார் படம் போல கூட்டத்தையும், விசில் சத்தத்தையும் பார்த்தது கேட்டது இல்லை என தெரிவித்தார்.
- கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 2 ஆண்டுகளில் மேலும் 75000 பேர் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என விளக்கம்.
குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சுதந்திர நாள் விழா உரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.
தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலிப் பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.
இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், "நான் முதல்வன்" திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல்.
- விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியானதை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது, 'திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது' என்று சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது.
இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, "'பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது' என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது" என்றார்.
- துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேசை கைப்பற்றினார்.
- பெண்ணின் உடலை பெட்டியில் வைத்து இழுத்து சென்று சாலையில் வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேசை கைப்பற்றினார்.
தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன். கார்த்திக், உதவி கமிஷனர் பரத் ஆகியோரும் நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொன்று சூட்கேஸில் வைத்து வீசி சென்ற விவகாரத்தில் குற்றவாளி மணிகண்டன், பெண்ணின் உடலை பெட்டியில் வைத்து இழுத்து சென்று சாலையில் வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது.
நேற்று அதிகாலை 2.50 மணியளவில் உடலை பெட்டியில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி இடம்பெற்றுள்ளது. 2 நிமிடங்களில் பெட்டியை வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
- இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
- வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ் தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்திருந்தது. ஷன்டோ 15 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் மேலும் 4 ரன்கள் அடித்து 8 ரன்னில் ஆட்டிழந்தார். அதேவேளையில் ஷன்டோ 20 ரன்கள் எடுத்த நிழைலயில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் 40 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடனேயே, வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.
இதனால் வங்கதேசம் 2-வது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெஹிது ஹசன் மிராஸ் மற்றும் டஸ்கின் அகமது களத்தில் இருந்தனர். இதில், டிஸ்கின் 11 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். ஹசன் மிராஸ் உடன் நஹிட் ராணா ஜோடி சேர்ந்தார். நஹிட் ராணா 11 ரன்களில் அவுட்டானார்.
இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ் தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
- ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம், பழனியப்பா தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அந்தியூர் கிளையில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜய் பி.இ. சிவில் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சாமிக்கண்ணு தனது மகன் விஜயை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து விட வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் கோபி கிளையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் தனக்கு தெரிந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா என்பவர் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சாமிக்கண்ணிடம், மகேந்திரராஜாவை அறிமுகம் படுத்தியுள்ளார்.
பின்னர் சில நாட்களில் மகேந்திர ராஜா தொலைபேசி மூலம் சாமிக்கண்ணுவை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி சாமிக்கண்ணு ரூ.15 லட்சத்தை மகேந்திர ராஜாவிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணி நியமன ஆணையை அவருக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் மகேந்திரா ராஜா மீண்டும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி சாமிக்கண்ணிடம் இருந்து மேலும் ரூ.14 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் விஜய்யிடம் கொடுத்த பணி நியமன ஆணையை திரும்ப வாங்கிக்கொண்டு இ-மெயில் மூலம் வேலைக்கான உத்தரவு வரும் என்று கூறி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு உத்தரவும் வரவில்லை. இது குறித்து சாமிக்கண்ணு, சாமியப்பனிடம் கேட்டபோது அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாமிக்கண்ணு இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சாமியப்பனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
- சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- எஸ்.பி.யின் உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடும் பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது. எஸ்.பி.யின் இந்த உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






